செய்திகள் :

IND vs PAK: கைகொடுக்காமல் வந்த ஹர்மன்பிரீத்; இடையில் நிறுத்தப்பட்ட போட்டி - வெற்றியை நோக்கி இந்தியா

post image

இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது.

நடந்து முடிந்த ஆண்களுக்கான ஆசியக் கோப்பையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியின்போது கேப்டன்கள் கை கொடுத்துக்கொள்ளாததைப் போலவே இன்றும் டாஸின்போது இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா கை குலுக்கிக்கொள்ளாமல் பிரிந்தனர். பாகிஸ்தான் டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வுசெய்தனர்.

Team India

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதல், அதைத்தொடர்ந்த ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே கை குலுக்காமல் செல்வது தொடர்கிறது.

ஒருபடி மேலாக சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் அமைச்சரின் கைகளால் ஆசியக் கோப்பையை வாங்க மறுத்தார். இன்றுவரை கோப்பை இந்திய அணியிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.

இன்றைய இந்திய அணியின் பிளேயிங் 11-ல் முன்னணி ஆல் ரவுண்டர் அமன்ஜோத் கவுர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் தாக்கூர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

IND vs PAK - மகளிர் உலகக்கோப்பை

Richa Ghosh

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 247 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினர்.

ஆட்டத்துக்கு நடுவே பூச்சிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் மைதானத்துக்குள் புகைபோடும் இயந்திரத்தின் மூலம் பூச்சிகளை விரட்டினர். இதற்காக போட்டியை 10 நிமிடத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்தனர்.

248 ரன்களை சேஸ் செய்யும் மிக மிக மெதுவான தொடக்கத்தைக் கொடுத்துள்ளனர். முதல் 15 ஓவர் முடிவில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.

இந்திய வெற்றிபெறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

சுப்மன் கில்லுக்கு கொடுக்கும் 'அதீத' அங்கீகாரம் - சில கேள்விகள்

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வருகின்ற 19ம் தேதி தொடங்கவுள்ள சுற்றுப்பயணத்துக்கான அணி நேற்று (அக்டோபர் 4) அறிவிக்கப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனா... மேலும் பார்க்க

``எனக்கு ஒருபோதும் அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை" - தோனி குறித்து வருந்தும் சூர்யகுமார் யாதவ்

2024-ல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோலி, அக்சர் படேலின் பேட்டிங், பும்ரா, ஹர்திக்கின் பவுலிங் என இந்தியாவின் வெற்றிக்கு அத்தனை காரணிகள் இருந்தாலும், 2007-ல் ஸ்ரீசாந்த் செய்ததைப் போல கடைசி நொ... மேலும் பார்க்க

ரோஹித்தின் கேப்டன்சியை பறித்தது ஏன்; அகர்கார் கூறும் காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நீண்ட நாள்களாக உலாவிக்கொண்டிருந்த, `அடுத்த ஒருநாள் அணி கேப்டன் கில்' என்ற பேச்சை உறுதிப்படுத்தி ரோஹித்தின் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அஜித் அகர்கார் தல... மேலும் பார்க்க

ஜடேஜாவின் ODI கரியருக்கு முற்றுப்புள்ளி? ஆஸி., தொடரில் ஏன் தேர்வாகவில்லை; அகர்கார் என்ன சொல்கிறார்?

இந்திய அணி அக்டோபர் பிற்பாதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவிருக்கிறது.அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொட... மேலும் பார்க்க

Ind vs Aus: கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் நீக்கம்; ODI அணிக்கும் கேப்டனாகும் கில்; முழு விவரம்

இந்திய அணி கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.அதைத்தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்க... மேலும் பார்க்க

`அந்த நாலு பேர்' - இரண்டரை நாளில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா வந்திருக்கும் ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.அகமதாபாத்தில் நேற்று முன்தினம் (அக்டோபர் 2) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி... மேலும் பார்க்க