செய்திகள் :

iPhone 17: இரவிலிருந்தே காத்திருந்த மக்கள்; மும்பை ஆப்பிள் ஷோரூமிற்கு வெளியில் தள்ளுமுள்ளு!

post image

புதிதாக விற்பனைக்கு வந்துள்ள ஐபோன் 17  (iPhone 17 Pro and Pro Max) இந்தியாவில் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் ஐபோன் ஷோரூம் மும்பை மற்றும் டெல்லியில் இருக்கிறது. மும்பையில் உள்ள பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் இருக்கும் அந்த ஷோரூமிற்கு இன்று காலையிலேயே மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் நாட்டின் பல பகுதியில் இருந்து போன் வாங்க ஏராளமானோர் வந்து குவிந்தனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. முதலிலேயே வந்தவர்கள் வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தாமதமாக வந்தவர்கள் கூட்டத்தின் முன்னால் அல்லது இடையில் நுழைய முயன்றனர்.

இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஆப்பிள் ஷோரூமிற்கு வெளியில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஷோரூம் பாதுகாப்புக்கு நின்ற ஒரு சில காவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. காவலர்கள் கையில் கம்புடன் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் ஆப்பிள் ஷோரூமிற்கு வெளியில் போர்க்களம் போன்ற ஒரு சூழல் ஏற்பட்டது.

இது குறித்து சம்பவ இடத்தில் நின்ற மோகன் யாதவ் பேசுகையில், ''நான் அகமதாபாத்தில் இருந்து வந்திருக்கிறேன். காலை 5 மணியில் இருந்து வரிசையில் நிற்கிறேன். ஆனால் அதன் பிறகு வந்தவர்கள் இடையில் புகுந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். போதிய அளவு பாதுகாவலர்களும் கிடையாது. இடையில் புகுந்தவர்களை கட்டுப்படுத்தவும் இல்லை. இதனால் பிரச்னை ஏற்பட்டது'' என்று தெரிவித்தார்.

iphone
iphone - ஐபோன்

இரண்டு வரிசைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. டெல்லியில் உள்ள ஆப்பிள் ஷோரூமிலும் இதே போன்று பொதுமக்கள் முதல் நாள் இரவில் இருந்தே புதிய ஐபோன் 17 வாங்க வரிசையில் காத்திருந்தனர். பொதுமக்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டு சண்டையிட்டுக்கொண்ட வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஐபோன் 17 சீரிஸின் விலை ₹82,900 முதல் ₹2,29,900 வரை இந்தியாவில் விற்பனையாகிறது. இந்தியாவில் செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்தவர்கள் மற்றும் விற்பனை தொடங்கி இருக்கிறது.

மும்பையில் ஐபோன் 17 வாங்கிய அமன் மேமன் இது குறித்து கூறுகையில், ''நான் எனக்கும் எனது குடும்பத்திற்கும் சேர்த்து 3 போன் வாங்கி இருக்கிறேன். காலை 3 மணியில் இருந்து வரிசையில் காத்திருந்து இதை வாங்கினேன்'' என்று தெரிவித்தார்.

`டாக்ஸி ஓட்டுநர்களின் அட்டூழியம்...'- கோவா சென்ற சுற்றுலா பயணிக்கு நேர்ந்தது என்ன?

வெளியூர்களுக்கு பயணம் செய்து சுற்றுலா மேற்கொள்ளும் போது பல்வேறு இன்னல்களையும் சவால்களையும் பயணிகள் சந்திக்கின்றனர். அந்த வகையில் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் கோவாவிற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஒரு க... மேலும் பார்க்க

விளம்பரம் பார்த்தால் தான் டாய்லெட் பேப்பர்; சீனாவில் புதிய வினோத நடைமுறைக்கு குவியும் கண்டனங்கள்!

சீனாவில் உள்ள பொதுக் கழிப்பறைகளில் டாய்லெட் பேப்பரை வீணாக்குவதைத் தடுக்கும் நோக்கில், அதைப் பெறுவதற்கு முன் பயனர்கள் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வி... மேலும் பார்க்க

'கண்ணுக்குத் தெரியாத' வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி; இன்ஃப்ளூயன்சருக்கு வந்த சோதனை!

அமெரிக்காவின் புகழ்பெற்ற 'கண்ணுக்குத் தெரியாத வீட்டில்' (Invisible House) தங்கியிருந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவருக்கு செல்ஃபி எடுத்ததற்காக சுமார் 8.7 லட்சம் ரூபாய் ($10,000) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், ... மேலும் பார்க்க

Egypt: அருங்காட்சியகத்தில் இருந்த 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு மாயம் - பின்னணி என்ன?

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இருந்து, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான தங்கக் காப்பு ஒன்று மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற... மேலும் பார்க்க

பால் தாக்கரே மனைவி சிலை மீது சிவப்பு பெயிண்ட்டை ஊற்றிய மர்ம நபர்; மும்பை தாதர் பகுதியில் பதற்றம்

மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதான வளாகத்திற்கு வெளியில் ஒரு நுழைவு வாயிலில் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயின் மார்பளவு சிலை இருக்கிறது. சிவாஜி பார்க் எப்போதும் பிஸியாகவ... மேலும் பார்க்க

50,000 தேனீக்களுடன் நட்பு; உடலை மூடிய தேனீக்கள், ஆனாலும் கொட்டவில்லை - உ.பியில் நடந்த விநோத சம்பவம்

தேனீக்கள் என்றாலே, நம்மில் பலருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். அதன் கொடுக்குகள் ஏற்படுத்தும் வலியும், வீக்கமும் இதற்குக் காரணம். தேனீயைப் பார்த்தாலே தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தேனீ... மேலும் பார்க்க