பிக் பாஸ் 8: முதலில் போட்டி, பிறகுதான் நட்பு! செளந்தர்யாவுக்கு சிவக்குமார் ஆறுதல...
IPL: 'ரிஷப் நீங்கள் எப்பவும்..!'- லக்னோவுக்கு செல்லும் பன்ட் குறித்து டெல்லி உரிமையாளரின் பதிவு
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக நடைபெற்றது.
இந்த மெகா ஏலத்தில் 10 அணிகள் தரப்பில் 182 வீரர்கள் வாங்கப்பட்டு இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். 9 ஆண்டுகள் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்த ரிஷப் பண்ட் இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டது ரசிகர்களுக்கும் ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
தனது பழைய அணியான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு குட் பை சொல்லும் விதமாக , "டெல்லி கேப்பிடல்ஸ் உடனான எனது பயணத்தில் ஆச்சரியங்களுக்கு குறைவில்லை. மைதானத்தில் இருந்த த்ரில்லும், அதற்கு வெளியே கிடைத்த தருணங்களும், நான் கற்பனை செய்யாத வழியில் வளர்ந்திருக்கிறேன். ஒரு டீனேஜராக இங்கு வந்தேன், கடந்த 9 ஆண்டுகளில் நாம் இணைந்து வளர்ந்திருக்கிறோம்" என்று ஒரு எமோஷனல் பதிவை நேற்று ரிஷப் பண்ட் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர் பார்த் ஜிண்டால் ரிஷப் பண்ட் குறித்து ஒரு உணர்ச்சிப்பூர்வ பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், " ரிஷப்... நீங்கள் எப்பவும் என்னுடைய தம்பியாகவே இருப்பீர்கள். உங்களை எனது குடும்பத்தில் ஒருவராக கருதி, முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயன்றுள்ளேன்.
நீங்கள் வேறு அணிக்கு செல்வதை பார்க்க உணர்ச்சிவசமாகவும் வருத்தமாகவும் உள்ளது. எப்போதும் நீங்கள் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஒரு அங்கம்தான். என்றாவது ஒருநாள் நாம் மீண்டும் ஒன்றுசேர்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs