IPL Auction: ரூ.30 லட்சம் டு 6 கோடி! - ஆர்சிபி போட்டி போட்டு வாங்கிய ராஷிக் சலாம...
IPL Mega Auction: 'அஷ்வினுக்கு ஏன் 9 கோடி கொடுத்தோம் தெரியுமா?' - பயிற்சியாளர் ஃப்ளெம்மிங் விளக்கம்
ஐ.பி.எல் மெகா ஏலம் நேற்று நடந்திருந்தது. இந்த ஏலத்தில் சென்னை அணி முதல் நாளில் 7 வீரர்களை வாங்கியிருந்தது. அதில் அஷ்வினை சென்னை அணி வாங்கியதைத்தான் அத்தனை பேரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அஷ்வினை ஏன் 9.75 கோடிக்கு வாங்கினோம் என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெம்மிங் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சென்னை அணி ராஜஸ்தானோடு போட்டி போட்டு விடாப்பிடியாக அஷ்வினை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. இதைப் பற்றி பேசுயிருக்கும் ஸ்டீபன் ஃப்ளெம்மிங், 'அஷ்வின் தன்னுடைய சொந்த மண்ணுக்கு திரும்புகிறார். அவர் ஒரு உலகத்தரமான பௌலர். அஷ்வினை இத்தனை கோடிக்கு எடுத்ததைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், சில வீரர்களை பணத்தை வைத்து அளவிட முடியாது. அஷ்வினுக்கும் சென்னைக்கும் இருக்கும் உணர்ப்பூர்வமான பந்தத்தைதான் நாங்கள் பார்த்தோம். அந்த அடிப்படையில் அஷ்வின் எங்களுக்கு நல்ல தேர்வுதான்.
அஷ்வின் அவருடைய கரியரின் கடைசிக் காலக்கட்டத்தில் இருக்கிறார் என்பது தெரியும். ஆனாலும் அவரின் ரெக்கார்டுகள் பிரமாதமாக இருக்கிறது. அவரின் அனுபவமும் எங்களுக்கு பலனைக் கொடுக்கும். பேட்டிங்கிலும் அவரை நம்பலாம். அதனால் அவரை பல விதங்களிலும் பயன்படுத்தலாம்.' என்றார்.
நூர் அஹமதுவையும் குஜராத்தின் RTM யையெல்லாம் தாண்டி 10 கோடி ரூபாய்க்கு சென்னை வாங்கியிருந்தது. அவரை வாங்கியதைப் பற்றி ப்ளெம்மிங் பேசுகையில், 'மிடில் ஓவர்களில் எதிரணியை அட்டாக் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நூர் அஹமதுவை அணியில் எடுத்தோம். ஸ்பின்னுக்கு சாதகமாக திரும்பும் பிட்ச்கள் கிடைத்தால் நூர் அஹமதுவை வைத்து அட்டாக்கிங்காக வீசி விக்கெட்டுகளை எடுக்க முடியும்.
இப்போதைய டி20 சூழலில் மிடில் ஓவர்களில் வெறுமென ரன்களை கட்டுப்படுத்தினால் மட்டும் போதாது. அப்படி செய்தால் எதோ ஒரு கட்டத்தில் பேட்டர்கள் போட்டிக்குள் வந்து விடுவார்கள். அட்டாக்கிங்காக வீசி விக்கெட் எடுத்தால் மட்டுமே அணிகளை கட்டுப்படுத்த முடியும். கடந்த சீசனில் அதில்தான் நாங்கள் கொஞ்சம் சறுக்கினோம்.' என்றார்.
மேலும் பேசியவர், 'ரச்சின் ரவீந்திரா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக ஆடியதையும் கணக்கில் கொண்டிருந்தோம். ஆனால், அவர் கடந்த சீசனிலேயே ஐ.பி.எல் லிலும் சிறப்பாக ஆடிவிட்டார். அவரை கொஞ்சம் குறைவான விலைக்கே நாங்கள் எடுத்துவிட்டோம்.' என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...