செய்திகள் :

ITFOK 2025: "பெண்களின் படைப்புகளால் புதிய குரல்கள் உயிர்ப்பிக்கின்றன'' - நாடகக் கலைஞர் நீலம் செளத்ரி

post image
கேரளாவின் சர்வதேச நாடக விழாவின் 15வது பதிப்பின் தொடக்கத்தில் திரையிடப்பட்டது நீலம் சௌத்ரியின் 'ஹயவதனம்' நாடகம்.

மேடை நாடகங்களின் எல்லைகளைப் பெண்கள் தகர்த்து வருவதாகக் கருத்து தெரிவித்த பிரபல படைப்பாளரான நீலம், "பெண்கள் சில அற்புதமான படைப்புகளை உருவாக்கி வருகின்றனர். புதிய குரல்கள் உயிர்ப்பித்து வருகின்றன. தங்களது புதுமையான தயாரிப்புகளால் பெண்கள் சமூகத்தில் அலைகளை உருவாக்கி வருகின்றனர்" எனக் கூறினார்.

கேரளாவின் சர்வதேச நாடக விழா 2025-ம் ஆண்டின் 15வது பதிப்பில் அரங்கேற்றப்பட்ட 15 நாடகங்களில் சுமார் 8 நாடகங்கள் பெண்களால் இயக்கப்பட்டுள்ள நிலையில், இது நாடக உலகில் பெண்களின் முன்னேற்றத்தை காட்டும் முக்கிய சான்றாகத் திகழ்கிறது. நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட் எழுதிய நாடகத்தின் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்ட நீலம் சௌத்ரியின் படைப்புகள் கேரளாவின் சர்வதேச நாடக விழாவின் தொடக்கத்தில் திரையிடப்பட்டது.

நீலம் சௌத்ரி

நீலம் சௌத்ரி பேசுகையில், "எங்கள் நாடகத்தில், நாங்கள் கட்டுக்கதையைப் பயன்படுத்தி, அதற்கு ஒரு சமகாலத் திருப்பத்தைக் கொடுத்துள்ளோம். நாடகம் மிகச் சிக்கலானது. தாமஸ் மானின் 'தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்நாடகம், முழுமையின் உணர்வைக் குறித்தது. மனிதர்களுள் முழுமையை நாடுவது முட்டாள்தனம். மனித இயல்பின் உண்மையான அழகு முழுமை பெறாததை ஏற்பதில் உள்ளது. ஹயவதனத்தின் பல பதிப்புகளை நான் கண்டுள்ளேன். முந்தைய பதிப்புகளில் காணப்பட்ட அனைத்து மூட பழக்க வழக்கங்களையும் உடைக்கவே நான் முயற்சித்தேன். நாடகத்தின் முடிவை முன்பே சிந்தித்து வைத்திருந்ததால், அதை மாற்றினேன்” எனக் கூறினார்.

மேலும், வருங்கால தலைமுறை நாடகக் கலைஞர்களுக்கான நம்பிக்கையைப் பற்றியும் இளம் படைப்பாளர்களை ஊக்குவிப்பது குறித்தும் பேசினார் நீலம் செளத்ரி. தியேட்டரில் உயிர்த்துள்ள துடிப்பான புதிய குரல்களைப் பாராட்டி பேசிய அவர், "இளம் கலைஞர்களின் ஆற்றல், ஆர்வம் மற்றும் உறுதிப்பாடு காண்போரைப் பிரமிக்க வைக்கின்றன. இளம் கலைஞர்கள் அச்சமற்றவர்கள். அவர்கள் தங்கள் முத்திரையைப் பதித்து வருகின்றனர்" எனக் கூறினார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

கும்பகோணம்: அரசு கலைக்கல்லூரி ஓவியக் கண்காட்சி; பிரமிக்க வைத்த மாணவர்களின் படைப்புகள் | Photo Album

கும்பகோணம் அரசு கவின் கல்லூரி மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள ஓவியக் கண்காட்சியில், வர்ணங்களின் மொழியில் பேசும் கலைஞர்களின் தத்ரூபமான படைப்புகள், பார்வையாளர்களின் மனதில் கதைகளாக நிலைத்து நிற்பதாகக் காட்ச... மேலும் பார்க்க

Avtar: 25 ஆண்டு விழாவை கொண்டாடிய அவ்தார் அமைப்பு!

அவ்தார் எனும் அமைப்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நிறுவனங்களுக்கும் குழுக்களுக்கும் அவைகளின் முன்னேற்றத்திற்காக ஒரு தலைமைத்துவ பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறது.மாற்றுத்திறனாளிகள், பால் புதுமையினர் போ... மேலும் பார்க்க

`நம் கதைகளை நாம்தானே சொல்ல வேண்டும்!' - புகைப்படங்கள் ஊடே வாழ்வியலை விளக்கிய பள்ளி மாணவர்கள்

ஆவி பறக்கும் கொத்து பரேட்டா கடை, இரைச்சல் கொட்டும் கல் குவாரிகள், அதிகாலை குளிரில் செங்கல் சூளையில் பதியும் கால்கள், அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்து ஓட்டுநர், கத்திகள் தயாரிக்கும் புலம் பெய... மேலும் பார்க்க

28 வயதில் 26 வேடங்கள்... டெல்லியில் மயானக் கொள்ளை... தெருக்கூத்து கலைஞர் சூர்யாவின் கலைப்பயணம்!

தெருக்கூத்து கலை மக்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இது சமூகத்திற்கு முக்கியமான செய்திகளை எளிதாக எடுத்துரைப்பதற்கு உதவும் கருவியாக அமைந்துள்ளது. எளிமையான முறையில் பல விடயங்களை நகைச்சுவையாக வெளி... மேலும் பார்க்க

Comic Con: காமிக் ரசிகர்களின் திருவிழா; ஸ்பைடர் மேன், பேட் மேன், லூஃபி வேடமிட்டு அசத்திய ரசிகர்கள்!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், மாருதி சுசூகி மற்றும் க்ரஞ்சிரோல் இணைந்து 'காமிக் கான்' எனும் இரண்டு நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மார்வல், டிசி, அனிமே, மங்கா, காமிக்ஸ் உள்ள... மேலும் பார்க்க