செய்திகள் :

28 வயதில் 26 வேடங்கள்... டெல்லியில் மயானக் கொள்ளை... தெருக்கூத்து கலைஞர் சூர்யாவின் கலைப்பயணம்!

post image

தெருக்கூத்து கலை மக்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். இது சமூகத்திற்கு முக்கியமான செய்திகளை எளிதாக எடுத்துரைப்பதற்கு உதவும் கருவியாக அமைந்துள்ளது. எளிமையான முறையில் பல விடயங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்துவதன் மூலம் சமூக அறியாமையைக் குறைக்க முடியும். மேலும், சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும். தெருக்கூத்து கலையில் அப்படி ஒரு கலைஞரைச் சந்தித்து பேசிய பொழுது...

“என் பேரு சூர்யா. வயது 28, கடந்த 15 வருடமாக நாடகத்துறையில இருக்கிறேன். நான் விழுப்புரம் மாவட்டம் திருஇடையாறு என்ற ஊர்ல இருந்து வந்திருக்கேன். என்னோட தாத்தா பின்னிசை தாளக்காரர். அதனால அவர் கூடவே நாடகங்கள் நடிக்கிற இடங்களுக்கு நானும் சின்ன வயசுலயே போக ஆரம்பிச்சேன். எனக்குச் சின்ன வயசுல இருந்தே நாடகங்கள் பிடிக்கும்.

தெருக்கூத்து கலைஞர் சூர்யா

எல்லா குழந்தைகளும் பல விளையாட்டுகள்ல ஆர்வம் காட்டும்போது, எனக்குத் தெருக்கூத்து மேல மட்டும்தான் ஆர்வம். பள்ளியில இருக்கும்போதும் தெருக்கூத்து பத்தி பிள்ளைங்ககிட்ட பேசிகிட்டே இருக்கிறது, அதையே நினைச்சிட்டு இருக்கிறது, தெருக்கூத்த தவிர்த்து மத்த சினிமா மேலயோ விளையாட்டு மேலயோ எனக்கு கவனம் போகாது. நாடகம் பத்தி வர்ரதனால தமிழ் பாடம் மட்டும்தான் எனக்குப் பிடிக்கும். அதுல மட்டும்தான் கொஞ்சம் ஆர்வம் வரும். மத்த பாடங்கள் மேல ஆர்வமே இருக்காது. ஒரு தடவ ஊர்ல நாடகம் போடும்போது அழுது ஒரு வேஷம் கேட்டு வாங்கினேன். வீட்ல ஒத்துக்கல நல்லா போட்டு அடிச்சிட்டாங்க, ‘என்னடா தாத்தாவும் கூத்தாடி... நீயும் கூத்தாடியா போகப் போறியா’ அப்படின்னு என்ன கட்டி கூரை வீட்ல தலைகீழா தொங்க போட்டு அடிச்சாங்க.

அப்படி அடிச்சும் அழுதுகிட்டு அடம் பிடிச்சுகிட்டு இருந்ததனால, ஒரு தடவதானே ஆடட்டும்னு வீட்ல விட்டாங்க. அப்ப எனக்கு 13 வயசு இருக்கும். அதுக்கு அப்புறம் அப்படியே வெளியே கூப்பிட ஆரம்பிச்சாங்க, இருக்க இருக்க ஆர்வமோ அதிகமாச்சு! அப்படி அதிகமாக ஆர்வம் வந்ததால் ஸ்கூலுக்கு போயிட்டு இருக்கும் போது ஸ்கூல் பைலயே பேன்ட், ஷர்ட் மடிச்சு வச்சுக்கிட்டு அங்கிருந்து அப்படியே நாடகத்துக்குப் போயிட்டு இருந்தேன். அந்த மாதிரிதான் என்னோட நாடகப் பயணம் முதல்ல தொடங்குச்சு” என்று கூறினார்.

“இதுபோல தெருக்கூத்து ஆட ஆரம்பிச்ச பிறகு எல்லாரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க. அதே நேரம் குடும்பத்துல வறுமை, அப்பா, அம்மா டெல்லியில் கூலி வேலை செய்தாங்க. அதனால தாத்தா பாட்டிகிட்ட தான் வளர்ந்தேன், பெத்தவங்க என்ன ஆதரிக்கல. அப்போ தாத்தா வீட்ல இருக்கும் போது, தாத்தா கூத்துக்குப் போனாதான் வீட்ல சாப்பாடு மத்தபடி எங்களுக்கு விவசாயம் செய்ய சொந்தமா நிலம் கூட இல்ல. அந்த நேரத்துல சாப்பிட்றதே ஒரு வேளைதான். நிறைய நேரம் பசியும் பட்டினியமா இருந்திருக்கேன். தெருக்கூத்து ஆட்ற ஊருக்குப் போயிட்டு சாப்டுட்டு அப்புறமா நாடகம் நடிப்பேன்.

தெருக்கூத்து கலைஞர் சூர்யா

பகல் முழுக்க பள்ளியில இருந்துட்டு இரவு தூக்கம் இல்லாமல நாடகம் நடிக்கும் போது எந்த கதாபாத்திரம் என்ன பேசுறாங்கன்னு பார்த்துகிட்டே இருப்பேன். பள்ளியில் கூட இரவில் என்ன ஆடுனாங்க?, எந்த கதாபாத்திரம் வந்தாங்க?, எந்த வசனங்கள் பேசினாங்கன்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன். பரீட்சை காலங்கள்ல நாடகம் ஆடும் இடத்துல போயிட்டு படிச்சிட்டு இருப்பேன். மகாபாரதம், ராமாயணம், கந்தபுராணம்னு இது எப்படி?, அது எப்படின்னு கொஞ்சம் கொஞ்சமா ஆசிரியர்கள் கிட்ட கேட்டுக் கேட்டு கத்துக்கிட்டது தான்” என்று கூறினார்.

“நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே தெருக்கூத்து ஆட வெளியே போயிட்டு இருந்தேன். என்னுடைய முதல் வேடம் பெண் வேடம் தான் ‘பொம்மை’ கதாபாத்திரம் நடித்தேன். அதுக்கப்புறம் தெய்வக்கன்னி, நளாயினி, பார்வதி, திரௌபதி அம்மன் இது போன்ற ஒரு சில பெண் வேடங்களில் நடித்திருக்கிறேன். இப்போ அதிகமா ஆட்றது மதுரவீரன், காத்தவராயன், கர்ணன், அரிச்சந்திரன், அர்ஜுனன், பீமன், துரியோதனன் வேடமிட்டு நடிப்பேன்.

தெருக்கூத்து கலைஞர் சூர்யா

ராமாயணத்துல வாலி, ஸ்ரீராமர், அனுமன், சுக்ரீவன் இதுபோல கதாபாத்திரங்களும் மற்றும் சிவபுராணத்தில் சிவபெருமான், கிருஷ்ணர், நாரதர், முருகப்பெருமான் வேடத்தில், வள்ளி திருமண நாடகத்தில் முருகர், சூரசம்ஹார முருகர் இது போன்ற வேடங்களும் ஆடுவேன். அசுர வேடங்களும் கட்டி ஆடி இருக்கிறேன், சூரபத்மன், ராவணன், பத்மாசுரன், வல்லான்மை கண்டன், மகிஷாசுரன் போன்ற கதாபாத்திரங்களும் கட்டி தெருக்கூத்து ஆடியுள்ளேன்” என்று கூறினார்.

“என் குடும்பத்துல இருப்பவர்களுக்கு நான் நாடகத்துல நடிக்கிறது கொஞ்சம் கூட விருப்பமில்ல. பட்டம் (டிகிரி) படிச்சிட்டு கவுரவமான ஒரு வேலைக்குப் போகாம, இதுபோல ஆடிக் கொண்டிருக்கிறானே என்ற கோபம் அவர்களுக்கு. அவர்களுக்குக் கௌரவமான வேலைன்னா ஒரு கம்பெனியிலயோ இல்ல ஐடி சார்ந்த வேலையிலயோ வேலை செய்றது தான்னு நினைச்சிகிட்டு இருக்காங்க. இப்பவும் இது போல கேள்விகளுக்கும் கிண்டல்களுக்கும் குடும்பத்திலும் சரி நண்பர்கள் கிட்டயும் சரி இப்ப வரைக்குமே மன உளைச்சலுக்கு ஆளாகிட்டு தான் இருக்கேன். ஆனா எனக்கு தெருக்கூத்துதான் பிடிக்கும், அதுல தான் என் வாழ்க்கையை அமைச்சுக்கிட்டு இருக்கேன்” என்று கர்வமாக கூறினார்.

“தெருக்கூத்து கலையைத் தமிழ்நாட்லயும் , பாண்டிச்சேரி, டெல்லி போன்ற இடங்களுக்கும் போய் ஆடியிருக்கேன். 2017 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரைக்கும் சொந்தமா நாடக கம்பெனி வச்சிருந்தேன்.

தெருக்கூத்து கலைஞர் சூர்யா

அதுல 13 பேருக்கு பயிற்சி கொடுத்து குழுவா பயணம் செய்தோம். அப்ப தான் 2018 ஆம் ஆண்டு டெல்லியில ‘மாசி மயானக் கொள்ளை’ என்ற நாடகத்தை 10 நாட்கள் தங்கி நடித்தோம். கொரோனாவிற்குப் பிறகு வறுமையின் காரணமாக நாடக கம்பெனியைத் தொடர முடியல. இப்போ வேற ஒரு நாடக சபையில சேர்ந்து அவங்களோட நடிச்சிட்டு வரேன்” என்றார்.

“தெருக்கூத்துதான் என்னோட முழு நேர பணியாக பண்ணிட்டு இருக்கேன். ஒரு சில மாதங்கள் பங்குனி, மாசி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள்ல அதிகமா வாய்ப்புகள் கிடைக்கும். இந்த குறிப்பிட்ட மாதங்கள தவிர்த்துட்டா ஒரு சில வாய்ப்புகள்தான் கிடைக்கும். போதுமான வருமானம் வருது.

தெருக்கூத்து கலைஞர் சூர்யா

அதுவும் இல்லாம இப்போ என்னுடைய தம்பி முறையாக இருக்கக்கூடிய பிராஷாந்த் என்னுடைய மாணவராக இருந்து இப்பொழுது என்னிடம் தெருக்கூத்து கலையைக் கற்று வருகிறார். மேலும் தெருக்கூத்து கலையில் பல இடங்களுக்குச் செல்ல வேண்டும், தெருக்கூத்து கலையைப் பணத்திற்காக மட்டுமல்லாமல் மக்களுக்கான பணியாக என் கலையைச் செய்து வருகிறேன்” என்று கூறினார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`நம் கதைகளை நாம்தானே சொல்ல வேண்டும்!' - புகைப்படங்கள் ஊடே வாழ்வியலை விளக்கிய பள்ளி மாணவர்கள்

ஆவி பறக்கும் கொத்து பரேட்டா கடை, இரைச்சல் கொட்டும் கல் குவாரிகள், அதிகாலை குளிரில் செங்கல் சூளையில் பதியும் கால்கள், அரியலூரில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்து ஓட்டுநர், கத்திகள் தயாரிக்கும் புலம் பெய... மேலும் பார்க்க

Comic Con: காமிக் ரசிகர்களின் திருவிழா; ஸ்பைடர் மேன், பேட் மேன், லூஃபி வேடமிட்டு அசத்திய ரசிகர்கள்!

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், மாருதி சுசூகி மற்றும் க்ரஞ்சிரோல் இணைந்து 'காமிக் கான்' எனும் இரண்டு நாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.மார்வல், டிசி, அனிமே, மங்கா, காமிக்ஸ் உள்ள... மேலும் பார்க்க

``நடபாவாடை நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பு, எல்லோருக்குமான வாய்ப்பு.." -இயக்குநர் சி.இராமசாமி

தேசிய நாடகப் பள்ளி '24-வது பாரத் ரங் மஹோத்ஸவ் சர்வதேச நாடக விழாவினை' சத்தீஸ்கர் உள்ளிட்ட பத்து மாநிலங்களில் பிப்ரவரி மாதம் நடத்துகிறது. இதில் புதுச்சேரியைச் சேர்ந்த `வெளிப்படை அரங்க இயக்கம்' என்ற நாடக... மேலும் பார்க்க

‘நவீன ஓவியம்’ என்றால் என்ன?'- ஓவிய கண்காட்சியில் விளக்கமளித்த ஓவியர் விட்டல் ராவ்

கோவை பெர்க்ஸ் பள்ளியில் சித்தார்த்தா அறக்கட்டளை சார்பில் ஓவியக் கண்காட்சியும், இந்திய ஓவியங்கள் குறித்தான உரையாடலும் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடைபெற்றது.இந்நிகழ்வில் மூன்று தலைமுறை பெண் ஓவியர்களான கமலா... மேலும் பார்க்க

Van Gogh: ரூ.3,400-க்கு வாங்கிய ஓவியத்தின் மதிப்பு ரூ.130 கோடியா?

வீட்டிலிருந்த பழைய பொருள்களை விற்பனை செய்தவரிடம் குறைந்த விலைக்கு வாங்கிய ஓவியம் ஒன்று தற்போது அதிசயிக்கத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு, பழமையான பொருள்களை சேகரிக்கும் நபர், ஒரு வீட்டிலி... மேலும் பார்க்க