Avtar: 25 ஆண்டு விழாவை கொண்டாடிய அவ்தார் அமைப்பு!
அவ்தார் எனும் அமைப்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நிறுவனங்களுக்கும் குழுக்களுக்கும் அவைகளின் முன்னேற்றத்திற்காக ஒரு தலைமைத்துவ பயிற்சி பட்டறையை நடத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள், பால் புதுமையினர் போன்றோருக்கும் பிரதிநித்துவம் அளிப்பது இதன் சிறப்பு அம்சம் ஆகும். தொழில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை மையப்படுத்தி இயங்கி வரும் அவ்தார் பல்வேறு சர்வதேச நிறுவனங்களோடு இணைந்து பல சிறு வர்த்தக குழுக்களுக்கும் உதவி வருகிறது. நேற்று சென்னை தி நகரிலுள்ள அக்கார்ட் ஹோட்டலில் இதன் 25ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் அவ்தார் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

அவ்தார் குழுவின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றினார். அவ்தார் அமைப்பு கடந்து வந்த பாதையையும் அதன் சிறப்பம்சங்களையும் விளக்கிய அவர்,"இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகிறது, பல்வேறு கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகிறது, மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குயர் சமூக மக்கள் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் அரவணைத்து அவ்தார் ஒர்க்ஸ்பேசை நடத்துகிறது.டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பெண்கள் பங்கேற்பது என்பது கடினமான ஒன்று.
பெண்கள் முன்னேற்றத்தில் இரண்டாண்டுகளாக சென்னை தான் இந்திய அளவில் முதலிடம் வகித்து வந்தது. இந்த ஆண்டு பெங்களூர் முதலிடம் வந்தது. சுற்றுசூழல், சமூக மற்றும் அரசாட்சி தொடர்பாக கடந்தாண்டு அவ்தார் ESG யை தொடக்கி வைத்தோம்"என்றார். தொடர்ந்து பேசிய டாக்டர் சௌந்தர்யா ராஜேல் அவ்தார் குழுவின் சாதனைகளையும், குறிக்கோள்களையும் பட்டியலிட்டார்.
அடுத்த நிகழ்வாக, இந்த விழாவுக்கு வந்திருந்தவர்களை குழு குழுவாக பிரித்து ஒரு சிறிய போட்டியும் நடத்தப்பட்டது. இதன்படி ஒவ்வொரு குழுவும் தங்களது திட்டங்களை வரைந்து காண்பித்து பார்வையாளர்களுக்கு விளக்கினர். பிறருக்கு பயன்படும்படி இருந்ததாக கூறினர் அங்கு வந்திருந்த பார்வையாளர்கள்.

அவ்தார் அமைப்பு 25 ஆண்டுகளை தொட்டதையொட்டி சௌந்தர்யா ராஜேஷ் எழுதிய Inclusion Victory என்ற நூல் வெளியிடப்பட்டது. இவர் முன்னதாக Conversation with the career doctors என்ற நூலையும் எழுதியுள்ளார். புதிதாக வெளியிடப்பட்ட நூலில் அவ்தார் அமைப்பு பற்றிய தகவல்களும் சாதனைகளும் இடம்பெற்றிருந்தன.