செய்திகள் :

Jiiva Missed Movies: `மெட்ராஸ் முதல் Thug Life வரை' - ஜீவா நடிக்காமல் மிஸ் செய்த படங்கள் இவைதான்

post image

ஜீவா நடிப்பில், பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் சமீபத்தில் `அகத்தியா' திரைப்படம் வெளியாகியிருந்தது. `அகத்தியா' திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடிகர் ஜீவா விகடனுடனான பிரஸ் மீட்டிற்கு இணைந்திருந்தார்.

அகத்தியா

அந்த பிரஸ் மீட்டில் நிருபர்களின் கேள்விகள் அத்தனைக்கு வெளிப்படையாவே ஜீவா பதிலளித்திருந்தார். நடிகர்கள் பலரும் தங்களுடைய கரியரின் முக்கிய நேரங்களில் பல முக்கியமான படங்களில் நடிக்கவேண்டிய வாய்ப்பைத் தவறவிட்டிருப்பார்கள். அப்படி அதில் அவர் மிஸ் செய்த படங்கள் குறித்தான விவரங்களையும் பகிர்ந்திருந்தார்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், சூர்யா நடித்திருந்த `அயன்' படத்தில் முதலில் ஜீவாதான் நடிக்க வேண்டியதாம். `கற்றது தமிழ்' படத்தின் ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் கே.வி. ஆனந்த் ஜீவாவை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அப்போது படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் இப்படம் நடக்காமல் போனது. இத்திரைப்படத்திற்குப் பிறகு கே.வி. ஆனந்த் டைரக்ஷனில் `கோ' படத்தில் ஜீவா நடித்தார். அருள்நிதி நடிப்பில் சாந்த குமார் டைரக்ஷனில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான `மெளனகுரு' படத்திலும் ஜீவாதான் முதலில் நடிக்க வேண்டியதாம். அதுபோல, பா. ரஞ்சித்தின் இரண்டாவது திரைப்படமான `மெட்ராஸ்' படத்திலும் ஜீவா நடிப்பதாக இருந்திருக்கிறது.

ஜீவா

அட்லீ இயக்குநராக அறிமுகமான `ராஜா ராணி' படத்தின் கதையும் முதலில் ஜீவாவிடம்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அக்கதையில் ஆர்யா நடித்தார். இதன் பிறகு அட்லீ தயாரிப்பாளராக அறிமுகமான `சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தில் ஜீவா நடித்தார். அதுபோல, மணி ரத்னமிடமிருந்தும் ஜீவாவுக்கு அழைப்பு வந்திருகிறதாம். ஜூன் மாதம் வெளியாகவிருக்கிற `தக் லைஃப்' படத்தில் நடிப்பதற்கு ஜீவாவை அழைத்திருக்கிறார் மணிரத்னம். அவை அந்த சமயத்தில் சரியாக அமையவில்லை என்பதையும் ஜீவா பகிர்ந்திருக்கிறார்.

இவையெல்லாம்தான் ஜீவா மிஸ் செய்த படங்கள்! இதில் உங்களுடைய பேவரைட் எது ?

Jailer 2: இணைகிறாரா மாஸ் ஹீரோ? பட்டை தீட்டப்பட்ட ஃபார்முலா; படத்தின் கதை இது தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. 'கூலி' படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்ட வேகத்தில், அடுத்த பட... மேலும் பார்க்க

``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்குநர் பாரி இளவழகன்

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'ஜடா', 'குட் நைட்', போன்ற படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய ஶ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார்.பாரி இளவழகன் இயக்கி நடித்திருந்தத் திரைப்படம் 'ஜமா'. கடந்த வருடம் ஆகஸ... மேலும் பார்க்க

``ப்ரியா பவானி சங்கருக்கு அப்போல்லாம் திரைப்படங்கள்ல நடிக்கிற ஆசையில்ல'' - நடிகர் ஈஸ்வர்

`ஆபீஸ்', `கல்யாணப் பரிசு', `தேவதையைக் கண்டேன்' போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். அவரைச் சந்தித்து அவருடைய சின்னத்திரை அனுபவங்கள் தொடர்பாக பல விஷயங்களைப் பேசி... மேலும் பார்க்க

Soundariya: `நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!' - ஆந்திராவில் மோகன் பாபு மீது ஒருவர் புகார்!

நடிகை செளதர்யா ஏப்ரல் 17, 2004-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். ஆனால், 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் ... மேலும் பார்க்க

Priyanka Chopra: ``நான் முதலில் பயந்தேன்; ஆனால், விஜய் அன்பாக நடந்து கொண்டார்!'' - மது சோப்ரா

நடிகை ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடனான `தமிழன்' திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிப்பிற்கு அறிமுகமானார். ப்ரியங்கா சோப்ரா நடித்த ஒரே திரைப்படம் இது மட்டும்தான். இத்திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அதிகம... மேலும் பார்க்க

Murmur Review: `Found Footage' முயற்சி ஓகே; ஆனால் இது ஒரு மர்மமான சினிமா அவஸ்தை!

ஜவ்வாது மலையில் ஒரு காடு. அதில் சூனியக்காரி ஆவி ஒன்று இருக்கிறதாம். அங்கேயே கன்னிமார் எனப்படும் நாட்டார் தெய்வங்களும் உலாவுகிறார்களாம். அதை ஆவணப்படுத்த நான்கு பேர் கொண்ட குழு ஒன்று செல்கிறது. அவர்களுக... மேலும் பார்க்க