செய்திகள் :

Jyothika : `ஹீரோக்களுடன் டூயட் பாடுறதை 20 வருடங்களுக்கு முன்பே நிறுத்திட்டேன்' - ஜோதிகா

post image
காதல் திரைப்படங்களில் நடிப்பதை 20 வருடங்களுக்கு முன்பே நிறுத்திவிட்டேன் என்று ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.

‘36 வயதினிலே’ படம் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் பாலிவுட்டில் அவரது நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ மற்றும் ‘ஸ்ரீகாந்த்’ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றிருந்தது. 

ஜோதிகா

இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் தற்போது  ‘டப்பா கார்ட்டெல்’ என்ற வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வெப்சீரிஸின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய ஜோதிகா, “காதல் திரைப்படங்கள், ஹீரோக்களுடன் டூயட் பாடுவது என்பதை 20 வருடங்களுக்கு முன்பே நான் நிறுத்திவிட்டேன்.

எனக்கு 47 வயது ஆகிறது. இன்னும் ஹீரோக்களைச் சுற்றி ஓடுவது போன்ற காதலை மையப்படுத்தி நடிக்கும் படங்கள் எல்லாம் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களைத்தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். ‘டப்பா கார்ட்டெல்’ வெப் சீரிஸும் அப்படி ஒரு கதை அம்சத்தைக் கொண்டதுதான்.

டப்பா கார்ட்டெல்

குறிப்பாக என்னுடைய கேரக்டரும் இந்த வெப் சீரிஸில் ஆழமாக இருக்கும். இந்தப் படக்குழுவில் 80 சதவிகிதம் பெண்கள்தான் பணிபுரிந்திருக்கிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Dragon: "உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி..." - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.`லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் ... மேலும் பார்க்க

`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' - தியாகராஜன் குமாராராஜா

யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன்... மேலும் பார்க்க

Amaran 100 : `` `நல்லப் படம் இல்லைனு தெரிஞ்சும் பண்றியா'னு எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை!" - கமல்ஹாசன்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தி... மேலும் பார்க்க

Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா...' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?

தன் வாழ்க்கையின் நலனுக்காக எந்தத் தவற்றையும் செய்யத் துணியும் இளைஞன், அதன் விளைவுகளை உணரும் கமெர்ஷியல் பயணமே இந்த 'டிராகன்'.48 அரியர்களுடன் கல்லூரியில் கெத்தாகத் திரிந்த 'டி. ராகவன்' என்கிற 'டிராகன்' ... மேலும் பார்க்க

NEEK Review: இந்த நிலா வெளிச்சம் பாய்ச்சுகிறதா, மேகங்களிடையே மறைந்து ஏமாற்றுகிறதா?

காதல் தோல்வியால் திருமணம் செய்யாமலிருக்கும் பிரபுவை (பவிஷ் நாராயண்) கட்டாயப்படுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே சென்றால், அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வா... மேலும் பார்க்க