பராசக்தி படத்துல என்னை reject பண்ணிட்டாங்க! - Actress Papri Ghosh| Kaathuvaakula...
Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம்
தமிழகத்தில் முன்பு இருந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று நிறைவடைந்தது. இதில், திமுக சார்பில் 4 எம்.பி.க்கள் இடங்களும், அதிமுக சார்பில் 2 எம்.பி.க்கள் இடங்களும் இருந்தன.

இதில், திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம், சல்மா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் எம்.பி.க்களாக தேர்வாகினர்.
ஜூலை 25 ஆம் தேதி திமுக சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதி ஏற்றுப் பதவி ஏற்றுக் கொண்டார்.
"மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன் எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசின் சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்றுவதையும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதியேற்கிறேன்" எனத் தமிழில் கூறி பதவி ஏற்றார்.

இந்நிலையில் தற்போது கமல் ஹாசன் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.