கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஜய் டிவி சீரியல்கள்!
Kubera: 'இதனால்தான் சிரஞ்சீவி சாரை எல்லோருக்கும் பிடிக்கும், கமல் சார் ...'- நெகிழும் நாகர்ஜுனா
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா' திரைப்படம் வெளியானது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று (ஜூன் 22) ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் சிரஞ்சீவி குறித்துப் பேசிய நாகர்ஜுனா, “ எங்களுடைய வெற்றி விழாவிற்கு வருகை தந்த சிரஞ்சீவிக்கு சாருக்கு நன்றி. எனக்கு மட்டும் அல்ல. இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல. திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் அவரை மிகவும் பிடிக்கும்.
கமல் சாரின் ‘விக்ரம்’ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததைக் கொண்டாடுவதற்காக அவர் இங்கு வந்தார். அவரை வீட்டிற்கு அழைத்து விருந்துகொடுத்து அனுப்பி வைத்தார்.

அதேபோல பாலிவுட்டில் ஆமீர்கான் வந்தாலும் அவருடைய படத்தையும் ஆதரிப்பார். சின்ன படங்கள், பெரிய படங்கள் என எல்லாப் படங்களையும் ஆதரிப்பார்” என்று சிரஞ்சீவி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...