செய்திகள் :

Kuberaa: "அதுதான் அவருடன் பணியாற்ற விரும்பியதற்கான காரணம்" - இயக்குநர் சேகர் குறித்து ராஷ்மிகா

post image

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் நேற்று (ஜூன்21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்றோர் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

குபேரா
குபேரா

நேற்று இப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சேகர் கம்முலா சார் இயக்கத்தில் எதோ ஒரு மந்திரம் இருக்கிறது.

அதுதான் என்னை சமீராவாக (குபேரா படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம்) இந்தளவிற்கு நடிக்க வைத்திருக்கிறது.

கலை மீதான அவருடைய காதல் எப்போதும் அவரது படங்களில் தெரியும். அதுதான் நான் அவருடன் பணியாற்ற விரும்பியதற்கான காரணம். 

இந்த வாய்ப்பு கிடைத்தபோது, நான் முழுமையாக இப்படத்திற்காக என்னை ஒப்படைத்தேன். இன்று நீங்கள் சமீராவாகப் பார்க்கும் எல்லாமே அவருடைய பங்களிப்புதான்.

திறமையான நடிகர்களுடன் பணியாற்றும்போது நம்முடைய நடிப்பை உயர்த்த வேண்டிய பொறுப்பு இருக்கும். தனுஷ் சாருடன் சமீராவாக நடித்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

நாகார்ஜுனா சார்... அவரை ஒரு நடிகராகவோ, மனிதராகவோ வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அவரை மிகவும் போற்றுகிறேன். அவருடைய வாழ்க்கை முறை மிகவும் சிறப்பானது, அது எனக்கு உத்வேகம் தருகிறது.

குபேரா இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  நம்புங்கள், இந்தப் படம்  உங்கள் நேரத்தை வீணடிக்காது” என்று படக்குழுவினர் அனைவரையும் மென்ஷன் செய்து ரசிகர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Kuberaa: 'குபேரா' படத்தின் BTS புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா | Photo Album

Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்... மேலும் பார்க்க

Kuberaa: "தன் படத்தின் பெண் கதாபாத்திரங்களை சேகர் சக்திவாய்ந்ததாக எழுதுகிறார்" - சாய் பல்லவி

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் இன்று (ஜூன்20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில்... மேலும் பார்க்க

Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?

வங்கக் கடலில் பெரிய அளவிலான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் முழு உரிமையையும், மத்திய அமைச்சரிடம் லஞ்சம் கொடுத்துப் பெறுகிறார் கார்ப்பரேட் முதலாளியான நீரஜ் (ஜிம் சர்ப்). அதற்கான லஞ்சப் பணமான ... மேலும் பார்க்க

"தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது" - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

தெலங்கானா அரசின் திரைப்பட விருது விழாவில் 4ம் ஆண்டாக விருதை வென்றிருக்கிறார் துல்கர் சல்மான்.தெலுங்கில் 'மகாநாட்டி', 'சீதா ராமம்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' என துல்கர் சமீபமாகக் கதைத்தேர்வில் மிகுந்த கவன... மேலும் பார்க்க

Kubera: ``சேகர் கம்முலா நம்பிக்கையின் அடிப்படையில் படம் எடுப்பார், ஆனா நான்..'' - ராஜமௌலி

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்க... மேலும் பார்க்க

Kubera: ``1000, 2000 கோடி ஹீரோயின்'னு சொல்றது எல்லாத்தையும் மறந்துடுங்க'' - ராஷ்மிகா குறித்து தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்... மேலும் பார்க்க