செய்திகள் :

"தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது" - துல்கர் சல்மான் நெகிழ்ச்சி

post image

தெலங்கானா அரசின் திரைப்பட விருது விழாவில் 4ம் ஆண்டாக விருதை வென்றிருக்கிறார் துல்கர் சல்மான்.

தெலுங்கில் 'மகாநாட்டி', 'சீதா ராமம்' மற்றும் 'லக்கி பாஸ்கர்' என துல்கர் சமீபமாகக் கதைத்தேர்வில் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்.

இந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியையும், வரவேற்பையும் துல்கருக்குக் கொடுத்தது. இந்நிலையில், தெலுங்கான மாநில விருதைப் பெற்றிருக்கிறார் துல்கர்.

தற்போது தெலங்கானா மாநில திரைப்பட விருது விழாவில் லக்கி பாஸ்கர் படத்திற்கு ஜூரி விருது வழங்கப்பட்டது குறித்து துல்கர் சல்மான், "தெலுங்கு சினிமாவில் எனக்குக் கிடைக்கும் அற்புதமான கதாபாத்திரங்களை நினைத்து மகிழ்கிறேன்.

தெலுங்கில் நான் நடித்த ஒவ்வொரு படத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கிறது. விருது கிடைக்கிறது. இந்த உணர்வை விவரிக்க வார்த்தையே இல்லை. தெலங்கானா அரசு மற்றும் மரியாதைக்குரிய அதன் முதலமைச்சர் ரேவந்த் காரு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

விருதுக் குழுவிற்கும் எனது நன்றிகள். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், சினிமாவைக் கொண்டாடும் அற்புதமான தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்” என்று தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்திருக்கிறார்.

துல்கருக்குச் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Kubera: ``சேகர் கம்முலா நம்பிக்கையின் அடிப்படையில் படம் எடுப்பார், ஆனா நான்..'' - ராஜமௌலி

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்க... மேலும் பார்க்க

Kubera: ``1000, 2000 கோடி ஹீரோயின்'னு சொல்றது எல்லாத்தையும் மறந்துடுங்க'' - ராஷ்மிகா குறித்து தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்... மேலும் பார்க்க

``இங்கே நான் நிற்பதற்கு காரணம் என் அப்பாதான்; எங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டார்..''- தனுஷ் எமோஷனல்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்... மேலும் பார்க்க

Kubera: `யாருக்கு தான் கடன் பிரச்னை இல்ல; ரூ.150 சம்பாதிச்சாலும் பிரச்னைதான், 1 கோடி..' - தனுஷ்

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப்... மேலும் பார்க்க

Kubera: `விஜய் தேவரகொண்டாவிடமிருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்வேன்' -வைரலாகும் ராஷ்மிகாவின் வீடியோ

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப்... மேலும் பார்க்க

Rashmika: 'இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை என புரிந்தது'- ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?

தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.குபேராஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இ... மேலும் பார்க்க