பந்தை சேதப்படுத்தியதாக அஸ்வின் மீது புகார்; ஆதாரம் கேட்கும் டிஎன்பிஎல்!
``இங்கே நான் நிற்பதற்கு காரணம் என் அப்பாதான்; எங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டார்..''- தனுஷ் எமோஷனல்
தனுஷின் நடிப்பில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார்.
தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தனுஷிற்காக ஒரு ஏவி ஒளிபரப்பட்டது. அதன்பிறகு நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “என்னுடைய இந்த ஏவி பார்த்தபோது எனக்கு என்னுடைய அப்பாதான் ஞாபகத்திற்கு வந்தார். நான் நிறைய சாதிருப்பதுபோல் இந்த ஏவியில் இருக்கிறது.
ஆனால் என் அப்பாவின் சாதனைக்கு முன்பு இதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இன்றைக்கு இங்கே நான் நிற்பதற்கு காரணம் அவர் பட்ட கஷ்டங்கள்தான். இந்த சந்தர்ப்பத்தில் என் அப்பாவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து படத்தின் இயக்குநர் சேகர் கம்முலா குறித்துப் பேசிய தனுஷ் , "சேகர் சார் இந்த சினிமாவிற்காக கடினமாக உழைத்திருக்கிறார். உடல்நிலைப் பற்றி கூட யோசிக்காமல் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார்.

இது எனக்கு 51- வது படம் அதேசமயத்தில் என்னுடைய இரண்டாவது தெலுங்கு படம். சேகர் சாரோட நான் நடிச்ச முதல் படத்துக்கு முன்னாடியே இந்த கதை எனக்கு சொன்னார். அவருடன் இந்தப் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி” என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...