ராமேசுவரம் மீனவா்களை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்
Malavika Mohanan: "என் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது" - மோகன்லால் குறித்து மாளவிகா நெகிழ்ச்சி
தமிழில் விஜய்க்கு ஜோடியாக 'மாஸ்டர்' படத்தில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
தமிழில் அவ்வப்போது நடித்தாலும், மலையாளத் திரையுலகில் இப்போது முழு கவனம் செலுத்தி பிஸியாகியிருக்கிறார். தற்போது மலையாளத் திரையுலகின் ஜாம்பவான்களான நடிகர் மோகன் லால், இயக்குநர் சத்யன் அந்திகாட் இணைந்துள்ள 'ஹிருதயப்பூர்வம்' என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் மாளவிகா.
'கொச்சு கொச்சு சந்தோஷங்கள்', 'டி.பி. பாலகோபாலன் எம்.ஏ.', 'ரசதந்திரம்' போன்ற ஹிட் படங்களைக் கொடுத்து, விருதுகளையும் குவித்தவர் இயக்குநர் சத்யன் அந்திகாட். அவரும், மோகன் லாலும் இணைந்திருக்கும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியான தருணத்தைப் பற்றி மாளவிகா, "இந்த இருவரின் படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்திருக்கிறேன். இப்போது அவர்களுடனே சேர்ந்து பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
என் கனவுகளில் ஒன்று நிறைவேறியிருக்கிறது. இந்த அனுபவம் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது. அறிமுகமில்லாத இரண்டு பேர் சந்தித்துப் பல விஷயங்களைப் பற்றி உரையாடி, பழகும் மனதை வருடும் கதைதான் இது.
இப்படியான மனதை வருடும் படங்கள் எப்போது வரவேற்பைப் பெறும். அந்த வகையில் இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் நடித்த அனுபவங்களையும், நீங்கா நினைவுகளையும் எப்போதும் மனதில் பதிய வைத்திருப்பேன். எனக்கு ஆதரவாக இருந்த சத்யன் சார், மோகன் லால் சாருக்கு நன்றி. இன்றைய உலகத்தில் இப்படியான நட்புகள் கிடைப்பது அரிது" என்று தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play