செய்திகள் :

Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

post image

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு ஆய்வாளரும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரித்மேன் உடன் கிட்டத்தட்ட 3 மணிநேர உரையாடலை மேற்கொண்டார்.

கடந்த ஜனவரி மாதம் செதோரா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் கமத் உடனான பாட்காஸ்ட்டைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிரதமர் கலந்துகொள்ளும் இரண்டாவது நிகழ்ச்சி இதுவாகும். இந்த பாட்காஸ்டில் பிரதமர் பேசிய விஷயங்கள் குறித்துப் பார்க்கலாம்.

நரேந்திர மோடி, லெக்ஸ் ஃப்ரித்மேன்

`எனது பலம் 140 கோடி இந்தியர்களிடம் இருக்கிறது'

"எனது பலம் என் பெயரில் இல்லை, 140 கோடி இந்தியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அழியாத கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஆதரவில் இருக்கிறது. நான் ஒரு உலக தலைவரின் கைகளைக் குலுக்குகிறேன் என்றால், அது வெறும் மோடியின் செயல் அல்ல, 140 கோடி இந்தியர்கள் அதைச் செய்கின்றனர்" என்றார்.

உலக அமைதி பற்றி பேசும்போது புத்தர் மற்றும் காந்தியை மேற்கோள்காட்டினார் மோடி. "இந்தியா புத்தர் மற்றும் காந்தியின் நிலம். நாங்கள் மோதல்களை வேண்டுவதில்லை; நல்லிணக்கத்திற்காக நிற்கிறோம். எங்கெல்லாம் எங்களால் சமாதானத்தை ஏற்படுத்த முடியுமோ, அங்கெல்லாம் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடன் உரையாடலை வளர்ப்பதற்கான கடந்த கால முயற்சிகள் எல்லாம் விரோதத்தையே சந்தித்துள்ளன. - மோடி

ஆரம்ப கால சவால்கள்

தான் வளர்ந்த நாள்கள் பற்றி பேசிய மோடி, "நாங்கள் வறுமையில் இருந்தாலும் ஒருபோதும் அதன் சுமையை உணர்ந்ததில்லை. ஏனென்றால் எங்களுக்கு ஒப்பிடுவதற்கு எந்த வழியும் இல்லை. 'நீங்கள் ஷூ அணிந்ததே இல்லையென்றால், ஷூ அணிவதை மிஸ் செய்ய மாட்டீர்கள்'"

இத்துடன் பிரதமர் மோடி, தமது மாமா ஒருமுறை தமக்கு வெள்ளை கேன்வாஸ் காலணிகளை பரிசளித்ததையும், அவற்றை பள்ளியில் இருந்து தூக்கி எறியப்பட்ட சாக்பீஸைப் பயன்படுத்தி பளபளப்பாக்கியதையும் நினைவு கூர்ந்தார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டதாகவும், வறுமையை ஒருபோதும் போராட்டமாக பார்த்ததில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

Modi

விரோதம் மற்றும் விமர்சனங்கள்

பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்த எடுக்கப்பட்ட ராஜாந்திர முயற்சிகள் குறித்து பேசிய அவர் தனது பதவியேற்புக்கு பாகிஸ்தானை அழைத்ததை சுட்டிக்காட்டினார்.

மேலும், உரையாடலை வளர்ப்பதற்கான கடந்த கால முயற்சிகள் எல்லாம் விரோதத்தையே சந்தித்ததாகக் கூறியவர், "ஞானம் மேலோங்கி அவர்கள் அமைதியைத் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறோம்" எனப் பேசியுள்ளார் .

விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு, விமர்சனங்களை வரவேற்பதாக பதிலளித்தார். "விமர்சனம் என்பது ஜனநாயகத்தின் ஆன்மா. அது நிர்வாகத்தை மேம்படுத்தவும் முடிவெடுப்பதையும் செம்மைப்படுத்தவும் உதவுகிறது." எனக் கூறியுள்ளார்.

விரதம்: உணவுப்பழக்கத்தைத் தாண்டிய ஒழுக்கம்

மோடியுடன் உரையாடிய ஃப்ரித்மேன் இந்த நிகழ்வுக்காக 2 நாள்கள் தண்ணீர் மட்டுமே அருந்தி விரதம் இருந்ததாகக் கூறினார். மோடியிடம் அவரது உண்ணாவிரத பழக்கம் பற்றி கேள்வி எழுப்பியபோது அவர், விரதம் இருப்பது கடந்த 50 ஆண்டுகளாக அவரது வாழ்க்கையின் பகுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார். அது வெறும் மத செயல்பாடு என்பதைக் கடந்து உள்ளார்ந்த ஒழுக்கத்தின் வெளிப்பாடாக மாறிவிட்டது எனக் கூறியுள்ளார்.

"விரதம் வெறும் உணவை துறப்பது மட்டுமல்ல, அது புலன்களைக் கூர்மைப்படுத்துகிறது, சிந்தனையைத் துரிதப்படுத்துகிறது, தெளிவைக் கொண்டுவருகிறது. நான் விரதத்தை சுய-ஒழுக்கத்தின் சமநிலையைப் பேணுவதற்கான சக்திவாய்ந்த கருவியாகப் பார்க்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நவராத்திரியின்போது 9 நாள்கள் உணவு இல்லாமல் வெந்நீர் மட்டுமே அருந்தி விரதம் இருப்பதாகவும், விரதம் இருக்கும் நாள்களிலும் உலக தலைவர்களைச் சந்திப்பது, முக்கிய முடிவுகள் எடுப்பது, அரசு நிர்வாகத்தை நடத்துவது போன்ற அன்றாட பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Modi

அவர் விரதம் இருப்பது மத செயல்பாடாக இல்லாமல், உள்ளார்ந்த அனுபவமாக இருக்க வேண்டும் எனக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சிறுவயதில் மகாத்மா காந்தியின் காக்கை பாதுகாப்பு இயக்கத்தினால் உந்தப்பட்டு விரதம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இளைஞர்களுக்கு Modi -ன் அட்வைஸ்

"இரவு எத்தனை இருளானதாக இருந்தாலும், நிச்சயம் காலை பிறக்கும்" எனக் கூறினார் மோடி.

நம்பிக்கையின் முக்கியத்துவம் குறித்து, "நான் இங்கு ஒரு காரணமாக வந்திருக்கிறேன், நம்மை விட மேலான சக்தியால் அனுப்பப்பட்டிருக்கிறேன். நான் தனியாக இல்லை, என்னை அனுப்பியவர் என்னுடனே இருக்கிறார் என்ற நம்பிக்கை வேண்டும். வாழ்க்கையில் குறுக்குவழிகள் எதுவும் கிடையாது. குறுக்குவழிகள் நம்மை குறைத்துவிடும்.

பொறுமை, விடா முயற்சி மற்றும் அர்பணிப்பு ஆகிய மூன்றுமே வெற்றிக்கான வழிகள்" எனக் கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து நாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து மோடி பேசுகையில், "உங்களுக்குள் இருக்கும் மாணவனை எப்போதும் சாகவிடாதீர்கள்" என்று கூறினார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

``திமுகவுடன் கள்ளக் கூட்டணி'' - நேருக்கு நேராக முட்டிக்கொள்ளும் தவெக vs பாஜக! - என்ன நடக்கிறது?

டாஸ்மாக் விவகாரம் - தவெக குற்றச்சாட்டுதமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்து ... மேலும் பார்க்க

ஔவையார்... ஔவை யார்?! - தமிழக சட்டப்பேரவையில் நடந்த சுவாரஸ்ய விவாதம்!

இன்று நடந்து வரும் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஔவையார் குறித்த சுவாராஸ்ய உரையாடல் சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ் மணியன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சுவாமிநாதன், சபாநாயகர் அப்பாவுக்கு இடையில் ... மேலும் பார்க்க

``கட்டாய இந்தியை புதைப்போம்" - வைகோ; ``நேரம் முடிந்தது, அமருங்கள்" துணை சபாநாயகர்... பேசியதென்ன?

மதிமுக நிறுவனரும், மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ நேற்று தனது நாடாளுமன்ற உரையில், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கேள்வியெழுப்பியும், தேசிய கல்விக் கொள்கை இந்தித் திணிப்பை எதிர்த்தும் அனல் பறக... மேலும் பார்க்க

மோடியின் நேர்காணலில் ட்ரம்ப் குறித்த பேச்சு... வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்; நன்றி பாராட்டிய மோடி

இந்திய பிரதமர் மோடியிடம் நேர்காணல் செய்த லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டை நிகழ்ச்சியை தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்தப் பாட்காஸ்ட்டில் இந்திய பொருளாதாரம், வறு... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி... காரணம் என்ன?

தமிழகத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்களில் முக்கியமானது திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட். இந்த மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்தை பொருத்தே சுற்றுவட்டார பகுதிகளில் காய்கறி விலை ந... மேலும் பார்க்க

Modi: மோடிக்காக ரிஸ்க் எடுத்த ட்ரம்ப்; சீனா உடன் போட்டி - உலக முன்னேற்றத்துக்கு மோடி சொன்ன வழி!

பிரதமர் மோடியின் சமீபத்திய பாட்காஸ்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான உறவு, உலக அரங்கில் இந்தியாவின் இடம் மற்றும் சீனா உடனான உறவுகள் பற்றி பேசியுள்ளார். 'எந்த நாடும் தனியாக இருக்க முடியாது'உலக விவகாரங... மேலும் பார்க்க