செய்திகள் :

Mrs.India International 2024: முடிசூட்டிய சாக்ஷி குப்தா.. யார் இவர்?

post image

மிஸஸ் இந்தியா இன்க் சீசன் 5 இல் 2024 ஆம் ஆண்டுக்கான நடைபெற்ற மிஸஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் வெற்றியாளராக சாக்ஷி குப்தா தேர்வாகியுள்ளார்.

அழகு, திறமை, மன உறுதி ஆகியவற்றை எழுச்சியோடு கொண்டாடும் விதமாக, Mrs.India International 2024 போட்டியில், சாக்ஷி குப்தாவுக்கு வெற்றியாளர் பட்டம் வழங்கப்பட்டு, முடிசூட்டப்பட்டது.

பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட சாக்ஷி, நடைபெறயிருக்கும் மிஸஸ் சர்வதேச போட்டியில் இந்தியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார்.

பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்களை உள்ளடக்கிய நீதிபதிகள் குழு, சாக்ஷியின் நம்பகத்தன்மை, கருணை மற்றும் மற்றவர்களை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை போற்றி பாராட்டியது.

சாக்ஷி பன்முக திறமைகள் கொண்ட திறமைசாலி. அர்பணிப்போடு செயல்களில் ஈடுபடும் தன்மை கெண்ட நபர். கார்ப்பரேட் நிபுணராக தனது கெரியரை தொடங்கிய சாக்ஷி ஒப்பனை அலங்காரங்கள் செய்வதிலும் மாடலிங் செய்வதிலும் நாட்டம் கொண்டு திகழ்ந்தார். கன்டண்ட் கிரியேட்டிங்கிலும் கலக்கி வந்தார். பெல்லி நடனக் கலைஞராக விளங்கும் சாக்ஷி, கலை மற்றும் படைப்பாற்றல் மீது அதிக ஆர்வம் உள்ளவர்.

Mrs.India International 2024 போட்டியில் பட்டம் பெறும்போது அவர்கூறுகையில், "இந்தப் பட்டத்தைப் பெறுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னுடைய பயணம் வெற்றி பெறுவது மட்டுமல்ல; மற்றவர்களோடு இணைந்து அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவேன். எல்லா இடங்களிலும் உள்ள பெண்களின் தனித்துவமான பயணங்களைத் தழுவி, அவர்களின் உணர்வுகளை முழு மனதுடன் தொடர ஊக்குவிப்பேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

சாக்ஷி குப்தா | Mrs.India International 2024

"சாக்ஷி மன உறுதியின் உருவமாக திகழ்கிறார். அவரது பயணம் ஒவ்வொரு பெண்ணிடமும் உள்ள நம்பமுடியாத ஆற்றலுக்கு ஒரு சான்றாகும். மேலும், சாஷியை பார்த்து நெகிழ்ச்சி அடைகிறேன்" என மிஸஸ் இந்தியா இன்க் இன் தேசிய இயக்குநர் மோகினி ஷர்மா, சாக்ஷியின் சாதனையைப் பாராட்டி சர்வதேச உச்சிமாநாட்டில் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Beauty: கிளியோபாட்ரா, நூர்ஜஹான், எலிசபெத், டயானா... அரசிகளின் அழகு ரகசியங்கள்..!

அரசிகளின் அழகுக் குறிப்பு என்றாலே, நமக்கு கிளியோபாட்ராவும் அவருடைய கழுதைப்பால் குளியலும்தான் நினைவுக்கு வரும். இதைத் தாண்டி, கிளியோபாட்ரா உட்பட இன்னும் பல அரசிகளின் அழகு ரகசியங்களைச் சொல்கிறார் பியூட்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சாதம் வடித்த கஞ்சியை தலைமுடிக்கும் சருமத்துக்கும் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan:சாதம் வடித்த கஞ்சியை தலைமுடிக்கும், சருமத்துக்கும் பயன்படுத்துவது சரியானதா... ரைஸ்வாட்டர் ஃபேஸ்வாஷ், ரைஸ்வாட்டர் ஷாம்பூ என்றெல்லாம் இப்போது பிரபலமாகி வருகிறதே... இவற்றை உபயோகிக்கலாமா? வ... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை குஷ்பூ சொன்ன கேரட் - தேங்காய் எண்ணெய் கலவை... சருமத்தை இளமையாக்குமா?

Doctor Vikatan:நடிகை குஷ்பூ தனது சோஷியல் மீடியாவில், கேரட் துருவலோடு, தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவைத்த எண்ணெய் செய்முறையைப் பகிர்ந்திருந்தார். அது ஆன்டிஏஜிங் தன்மை கொண்டதாகவும் சரும நிறத்தை அத... மேலும் பார்க்க