செய்திகள் :

Mysskin: "நான் சினிமாவைவிட்டு விலகப் போறேன்; காரணம்..." - இயக்குநர் மிஷ்கின் ஓப்பன் டாக்

post image

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

Parandhu Po - Sunflower Song
Parandhu Po - Sunflower Song

மிஷ்கின் பேசும்போது, “சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர், ‘பிசாசு 2, டிரெயின் படங்களால் மிஷ்கின் முகவரியே இல்லாமல் போயிடுவார்’னு சொல்லியிருக்கார்.

அந்த நண்பர்கிட்ட தாழ்மையாகச் சொல்லிக்கிறேன், நானும் சீக்கிரமா சினிமாவை விட்டுப் போகணும்னுதான் நினைக்கிறேன்.

நான் இப்போ சினிமாவுல மகிழ்ச்சியா இல்லை. நான் மகிழ்ச்சியாக இருந்த காலமெல்லாம் போயிடுச்சு. போட்டியும் இப்போ அதிகமாகிடுச்சு, வியாபாரமும் அலைகழிக்குது.

உதிரம் சொட்டச் சொட்டத்தான் நான் சினிமாவுல இருந்துட்டு இருக்கேன். என்னை நிறைய சினிமா விழாக்களுக்கு அழைக்கிறாங்க. தயவு செய்து என்னைக் கூப்பிடாதீங்க.

அப்படிக் கூப்பிட்டால் ஒரு விழாவுக்கு 5 லட்ச ரூபாய் கொடுங்க. அதை வங்கியில போட்டு வச்சிக்கலாம். அந்தப் பணத்தை வச்சு என்னுடைய மகளை இன்னும் படிக்க வைக்கலாம்.

Mysskin
Mysskin

இப்போ விமர்சகர்கள் பற்றிப் பல விஷயங்கள் பேசுறாங்க. ஒரு படம் நல்லா இருந்தால், ‘நல்லா இருக்கு’னு சொல்வாங்க. நல்லா இல்லைனா, அந்தப் படத்தைக் கிழிக்கத் தான் செய்யணும்.

அந்த உரிமை எல்லோருக்குமே இருக்கு. ‘நல்லா இருக்கு’னு சொல்லும்போது நம்ம எல்லாம் பெருமைப்படுறோம். ஆனா, ‘நல்லா இல்லை’னு சொல்லும்போது மட்டும் கோபப்படுறோம்.

இந்தப் படத்தைப் பாருங்க, நிச்சயமாக ‘நல்லா இருக்கு’னு சொல்வீங்க. நல்லா இல்லைனாலும், ‘நல்லா இல்லை’னு சொல்லுங்க. இயக்குநர் ராம் எதுவும் நினைச்சுக்க மாட்டாரு,” என்றவர் நகைச்சுவையாக, “பலரும் நான் மேடையில மது குடிச்சிட்டு பேசுறதா சொல்றாங்க. நான் இரவு நேரத்துலதான் மது குடிப்பேன். விழாக்களுக்குக் குடிச்சுட்டு வரமாட்டேன்.” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Lokesh Kanagaraj: "மிடில் கிளாஸ் வாழ்க்கை கனக்ட் ஆனது" - மெட்ராஸ் மேட்னியை வாழ்த்திய இயக்குநர்!

காளிவெங்கட் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்திய... மேலும் பார்க்க

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த நிலையில்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை, நாட்டுப்புற பாடகி கலைமாமணி விருது பெற்ற `கொல்லங்குடி கருப்பாயி' காலமானார்

நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த 'ஆண்பாவம்' படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.... மேலும் பார்க்க

Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெகிழும் விஜய் சேதுபதி

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்; ரஜினி சார் பார்த்துட்டு..!" - இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க