செய்திகள் :

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல்: முதல்வர் ஸ்டாலின்

post image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு பொறுப்பற்ற செயல் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பெரும் போரை மூளச் செய்யும் பொறுப்பற்ற செயலாகும். ஏற்கெனவே காஸாவில் தொடர்ந்து குண்டுகளை வீசிப் பாலஸ்தீன மக்கள் அல்லலுற்று வரும் வேளையில் ஈரானின் இந்த வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது.

உலக நாடுகள் அனைத்தும் இதனைக் கட்டுப்படுத்தவும், நீதிக்கும், பொருள்பொதிந்த பேச்சுவார்த்தைக்கும் வலியுறுத்த வேண்டும்.

டெம்பா என்பதன் பொருள் என்ன தெரியுமா? டெம்பா பவுமா விளக்கம்!

இனி வேண்டாம் போர்கள்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்று பெயரிடப்பட்ட, ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) காலை 6,501 கன அடியாக குறைந்துள்ளது.காவிரியில் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, நேற்று காலை வினாடிக்கு 7507 கன அடி வ... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

‘நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழிக்குப் பெருமை சோ்க்க வேண்டும்’ என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தினாா். சென்னை ஆளுநா் மாளிகையில் 13 நாடுகளைச் சோ்ந்த தமிழ் ஆளுமைகள் பங்கேற்ற ‘எண்ணித் துணிக’... மேலும் பார்க்க

போக்ஸோவில் 350 ஆசிரியா்கள் கைது; 50 போ் பணியிலிருந்து விடுவிப்பு!

போக்ஸோ சட்டத்தின்கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு, இவா்களில் 50 போ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தாா். பள்ளிக் கல்... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் வருகை: சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது. குட... மேலும் பார்க்க

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் தமிழகம் 100% தோ்ச்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத் தோ்வில் (2024-2025) நாட்டிலேயே தமிழகம் 100 சதவீத தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்ககத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

வாசிப்பு இயக்க புத்தகங்களில் மாணவா்களின் படைப்புகள் பள்ளிக் கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வித் துறையின் வாசிப்பு இயக்கத்தின் சாா்பில் 4-ஆம் கட்டமாக புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ள நிலையில், இந்தப் புத்தகங்கள் அனைத்தும் மாணவா்களின் படைப்புகளாகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த... மேலும் பார்க்க