திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு 15 மின் இரு சக்கர வாகனங்கள் நன்கொடை
Newzealand: மசோதாவைக் கிழித்தெறிந்த மாவோரி இன எம்.பி; பழங்குடிப் பாடல் பாடி போராட்டம்! | Viral Video
நியூசிலாந்தின் 1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான வரலாற்றில், முதன்முறையாக 21 வயது இளம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க். மாவோரி மக்களின் மொழி, நிலம் மற்றும் பாரம்பர்ய அறிவு ஆகியவற்றைப் பாதுகாக்கும் பாதுகாவலராகவே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டவர்.
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையின் போது, நியூசிலாந்தின் மாவோரி பழங்குடியினரின் ஆதிகால பழக்கங்களில் ஒன்றான ஹக்கா நடனம் மற்றும் பாடலுடன் சேர்ந்து உடலை அசைத்துப் பேசியது அப்போதே உலகளவில் வைரலானது.
இந்த நிலையில், தற்போது அவரின் மற்றொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. வைதாங்கி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா கொண்டுவரப்பட்டது. அதாவது,1840-ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் பூர்வக்குடிகளாக அறியப்படும் மாவோரி மக்களின் தலைவர்களுக்கும் இடையே ‘வைதாங்கி ஒப்பந்தம்’ (Treaty of Waitangi) ஒன்று கையெழுத்தானது. அதில் மாவோரி பூர்வக்குடிகளுக்குச் சில சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யும் மசோதவுக்கு எதிராக 'டி பாடி மவோரி ( Te Pati Maori ) கட்சி' எம்.பி க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதலில் இளம் எம்.பி. ஹானா பழங்குடி பாடலுடன் மசோதா நகலைக் கிழித்து அவையின் நடுவே வந்து போராட்ட முழக்கம் எழுப்ப, அவருடன் மற்ற மவோரி எம்.பி.க்களும் இணைந்து கொண்டனர். அவர்களின் பழங்குடியினப் பாடலும், அதற்கேற்ற ஆவேச நடனமும் நியூசிலாந்து நாடாளுமன்றத்தை அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து சபாநாயகர் மவோரி எம்.பி.க்கள் அனைவரையும் அவையிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb