திருச்சி: பாலத்திற்குப் பதிலாக தென்னை மரம்; அவலநிலையில் எலமனூர் கிராமம்; விவசாயி...
PAN 2.0: 'கட்டணம் இல்லை' - QR கோடுடன் அப்டேட் செய்யப்படவிருக்கும் பான் அட்டைகள்!
பான், டான் எண்ணை ஒன்றிணைத்து, இனி பான் எண்ணை மட்டும் டிஜிட்டல் சேவைகளுக்கு பயன்படுத்தும்படியான பான் 2.0 திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பான் 2.0 திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் மாற்றத்தை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.1,435 கோடி ஆகும்.
இந்தத் திட்டம் மூலம் வரி செலுத்துவோர் பயன்படுத்தும் பதிவு மற்றும் சேவைகளில் தொழில்நுட்பம் சார்ந்த மாற்றமும், மேம்படுத்தப்பட்ட விரைவான சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பான் 2.0-ன் படி, அரசு டிஜிட்டல் சேவைத் துறையில் பான், டான்(TAN (Tax deduction and collection account number) ) எண் ஒன்றிணைத்து, பொது அடையாள எண்ணாக பான் எண் பயன்படுத்தப்படும். மேலும், இனி வரும் புதிய பான் அட்டைகளில் QR கோடுகள் இடம்பெறும். பழைய பான் அட்டைகளும் QR கோடுடன் அப்டேட் செய்யப்படும்.
இந்தத் திட்டம் குறித்து மத்திய அமைச்சர் பேசும்போது, "பான் 2.0 திட்டத்தின் முக்கிய நோக்கம் வருமான வரித் துறையின் செயல்பாடுகளை நவீனமயமாக்குவதே ஆகும். தற்போதுள்ள பான் அட்டையின் அமைப்பானது சற்று மேம்படுத்தப்பட்டு, டிஜிட்டல் முறையில் கொண்டு வரப்படும். அனைத்து அரசு டிஜிட்டல் சேவைகளிலும் பயன்படுத்தப்படும் பொது எண்ணாக பான் எண் மேம்படுத்தப்படும். QR உடன் கூடிய பான் அட்டைக்கு மக்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...