செய்திகள் :

Parandhu Po: "2009 ஈழப் பிரச்னைக்குப் பிறகு..." - இயக்குநர் ராமின் அரசியல் குறித்து மாரி செல்வராஜ்

post image

ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஞ்சலி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'பறந்து போ'.

இந்தப் படம் வருகிற ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 12) நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய மாரி செல்வராஜ், "ராம் சார் எப்போதும் சீரியஸ் ஆகப் பேசுவதுபோலத்தான் வெளியே தெரியும்.

பறந்து போ
பறந்து போ

ஆனால் அவர் ஜாலியாகப் பேசுகின்ற விஷயங்கள் வெளியில் வருவது இல்லை. அதிகமாக இருவரும் சேர்ந்து காமெடி படங்களைத்தான் பார்ப்போம்.

'மைக்கேல் மதன காம ராஜன்', 'பஞ்ச தந்திரம்' ஆகிய படங்களை 100 தடவைக்கு மேல் பார்த்திருப்போம். 'களவாணி' படம் வந்தபோது இந்த மாதிரி படம் எடு என்று என்னைச் சொன்னார்.

காமெடி சார்ந்து நிறைய விஷயங்களை இருவரும் பேசிக்கொள்வோம். எங்களை சீரியஸாக மாற்றியது ஈழப் பிரச்னைதான்.

2009-ல் நடந்த ஈழப்பிரச்னைக்குப் பிறகுதான் அவர் அரசியலைப் பேச ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து நிறைய அரசியலைப் பேசுவோம். அதுதான் எனது சினிமா பயணத்தை மாற்றி அமைத்தது.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

அதன்பிறகுதான் அரசியல் சார்ந்த கதைகளை எடுக்க நினைத்தேன். இல்லையென்றால் 'களவாணி' மாதிரியான ஒரு படத்தைத்தான் எடுத்திருப்பேன். அவர் சிரிக்கும்படியான கதைகளை எடுத்திருப்பேன்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Ananda Vikatan Cinema Awards 2024: பிரமாண்ட மேடை... திறமைக்கு மரியாதை... இன்று மாலை சென்னையில்!

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

Mysskin: "நான் சினிமாவைவிட்டு விலகப் போறேன்; காரணம்..." - இயக்குநர் மிஷ்கின் ஓப்பன் டாக்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறா... மேலும் பார்க்க

பறந்து போ: "யுவன் ரசிகர்களிடம் இருந்து கெட்ட வார்த்தை மெசேஜ் வருது" - இயக்குநர் ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறா... மேலும் பார்க்க

Vinveli Nayaga: "எத்தனை மகள்களால் தங்கள் தந்தைக்காக இப்படிப் பாட முடியும்" - நெகிழும் ஷ்ருதி ஹாசன்

கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி, கடந்த ஜூன் 5-ம் தேதி 'தக் லைஃப்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகிய இப்படத்தின் அத்தனை பாடல்களும் பலரின் மனதிலு... மேலும் பார்க்க

Parandhu Po: "என்னுடைய எல்லா படைப்புகளிலும் இயக்குநர் ராம் இருப்பார்" - சித்தார்த் நெகிழ்ச்சி

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறா... மேலும் பார்க்க

Parandhu Po: "என் மேல் ராம் சார் அன்பு வச்சிருக்கார்னு நினைச்சேன்; ஆனா..." - மிர்ச்சி சிவா

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறா... மேலும் பார்க்க