செய்திகள் :

Prithvi Shaw: `கடவுளே இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்' - பிரித்வி ஷா விரக்தியின் காரணம் என்ன?

post image

இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான இடத்தை எட்டக்கூடியவர் என்று ஒருகட்டத்தில் பலராலும் எதிர்பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. 2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்ற பிரித்வி ஷாவுக்கு அதே ஆண்டு அக்டோபரில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இதுவரையில் விளையாடிய 316 பேரில், 17 பேர் மட்டுமே தங்களது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்திருக்கின்றனர். அந்த எலைட் லிஸ்டில் பிரித்வி ஷாவும் ஒருவர்.

பிரித்வி ஷா

தான் அறிமுகமான டெஸ்ட் தொடரில் மட்டும் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்த பிரித்வி ஷா, அடுத்தடுத்த தொடரில் சொதப்பியது, காயம், ஃபிட்னஸை இழந்தது உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. கடந்த ரஞ்சி டிராபி தொடரில் மும்பை கிரிக்கெட் அசோசியேசன், பயிற்சிகளில் முறையாகப் பங்கேற்காததால் பிரித்வி ஷாவை நீக்கியது. ஐ.பி.எல் மெகா ஆக்ஷனிலும் அன்சோல்ட் ஆனார்.

தற்போது நடந்துமுடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள அவர் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த நிலையில், அடுத்து வரவிருக்கும் விஜய் ஹசாரே டிராபி தொடரிலும் மும்பை அணியிலிருந்து பிரித்வி ஷா கழற்றிவிடப்பட்டிருக்கிறார். இதனால் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டிருக்கிறார் பிரித்வி ஷா.

Instagram Story

அந்த ஸ்டோரியில், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனது ரெக்கார்டைக் குறிப்பிட்டு, ``கடவுளே, நான் இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்பதைக் கூறுங்கள். 65 இன்னிங்ஸ்களில் 126 ஸ்ட்ரைக் ரேட்டில் 55.7 சராசரியுடன் 3399 ரன்கள் எடுத்தும் போதுமானதாக இல்லையா... ஆனாலும், நான் உன் மீது நம்பிக்கை வைப்பேன். மக்கள் என்மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில், நான் நிச்சயம் மீண்டு வருவேன். ஓம் சாய்ராம்." என்று பிரித்வி ஷா பதிவிட்டிருக்கிறார்.

பிரித்வி ஷா

2018-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இந்திய அணியில் பிரித்வி ஷாவுடன் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், ரியான் பராக், அபிஷேக் சர்மா ஆகியோர் தற்போது இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

Virat Kohli: `கோலியின் பலம், பலவீனம் இதுதான்' - விளக்கம் தரும் புஜாரா

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி சொதப்புகிறது என்பதைத் தாண்டி, அதற்குக் காரணமே சீனியர் வீரர்களான கோலியும், ரோஹித்தும் தான் என கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின... மேலும் பார்க்க

Follow On Rules: ஃபாலோ-ஆன் என்றால் என்ன? - இந்தியாவைக் காப்பாற்றிய பும்ரா - ஆகாஷ் தீப் ஜோடி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் மட்டுமே பேட்டிங்கில் ஜொலித்து வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த டெஸ்டில் பரிதாபகரமாகத் தோ... மேலும் பார்க்க

AUSvIND: `ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசினாலே அவுட்' - கோலியின் தவறு தொடர்கிறதா?

நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரின் மிகப்பெரிய ஏமாற்றமாக மாறி நிற்கிறார் விராட் கோலி. பெர்த்தின் இரண்டாம் இன்னிங்ஸில் அழுத்தமே இல்லாத சூழலில் ஒரு சதம் அடித்ததோடு சரி, மற்ற எல்லா இன்னிங்ஸ்களிலும் சொதப்பல்த... மேலும் பார்க்க

AUSvIND: திடீர் காயம்; போட்டியிலிருந்து பாதியிலேயே விலகிய ஹேசல்வுட் - என்ன நடந்தது?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. பிரிஸ்பேனில் நடந்து வரும் மூன்றாவது போட்டியின் இடையிலேயே காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்ச... மேலும் பார்க்க

Virat Kohli: 'சச்சினிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் கோலி' - கவாஸ்கர் சொல்லும் அட்வைஸ்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைப்பெற்று வருகிறது.இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் இருக்கிறது. தற்போது மூன்றா... மேலும் பார்க்க

Sachin 241* : `11 ஆஸ்திரேலியர்கள் vs ஒற்றை சச்சின்!' - கவர் ட்ரைவே இல்லாமல் ஆடிய க்ளாஸ் இன்னிங்ஸ்!

பார்டர் கவாஸ்கர் தொடரில் விராட் கோலி மீண்டும் சொதப்பியிருக்கிறார். அதுவும் அவரது வழக்கமான பாணியில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துக்கு பேட்டை விட்டு அவுட் ஆகியிருக்கிறார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலக... மேலும் பார்க்க