செய்திகள் :

PVR INOX-ன் `Dine in Cinema', `Live kitchen'; டிக்கெட் விலை எவ்வளவு, படம் பார்க்கும் அனுபவம் எப்படி?

post image

இந்தியாவின் மிகப் பெரிய மல்டிபிளெக்ஸ் நிறுவனமான PVR INOX, தனது பிரத்தியேகமான 'டைன்-இன் சினிமா' (Dine-in Cinema) கான்செப்டை தற்போது பெங்களூரில் கொண்டு வந்திருக்கிறது.

திரையரங்கில் சாப்பிட்டபடி படம் பார்ப்பது ஒன்றும் நமக்குப் புதிதில்லை. ஆனால், ஹோட்டலில் ரவுண்டு டைனிங் டேபிளில் நான்குபேர் சுற்றி உட்கார்ந்தபடி படம் பார்ப்பதுதான் புதிய அனுபவமாக இருக்கிறது.

5 ஸ்டார் ஹோட்டலில் டைனிங் டேபிளில் நண்பர்கள், குடும்பத்தோடு சாப்பிட்டபடி 'PPT' பிரசன்ட்டேஷன், மீட்டிங் அட்டென்ட் பண்ணியிருப்போம். அதேபோல படம் பார்க்கும் அனுபவத்தைக் கொண்டுவந்திருக்கிறது 'PVR INOX'. இதோடு கேட்டதை உடனே சமைத்துத் தரும் 'லைவ் கிச்சன்' அமைப்பையும் கூடுதலாகக் கொண்டு வந்திருக்கிறது.

PVR INOX Dine in Cinema

படம் பார்க்கும் அனுபவம் எப்படி?

சரி, இருட்டிலா உட்கார்ந்து படம் பார்ப்பது என்ற கேள்வி வருகிறது. திரையைத் தவிர, சாப்பிடும் டேபிளில் மட்டும் மெல்லிய LED ஒளி விளக்குகளைப் பரவவிட்டிருக்கிறார்கள். அது படம் பார்க்கும் அனுபவத்தைக் கெடுக்காது என்கிறார்கள்.

தியேட்டரில் கொஞ்சம் சத்தம் கேட்டாலும், சீட் தேடுவதற்கு மொபைல் லைட்டை அடித்தாலும் அசௌகரியமாகும், படம் பார்க்கும் அனுபவத்தையே அது கெடுத்துவிடும். பாப்கார்ன் குலுக்கும் சத்தமே சிலருக்கு இரைச்சல்தான்.

PVR INOX Dine in Cinema

டிக்கெட் விலை என்ன?

இந்த டைன்-இன் திரையரங்குகளுக்கான டிக்கெட் விலை, இருவர் அமரும் மேசைக்கு ₹250 என்றும், நால்வர் மேசைக்கு சுமார் ₹800-₹900 என்றும் சொல்கிறார்கள்.

சாதாரணமாக பாப்கார்ன் விலையே கண்ணை கட்டும். இதில் லைவ் கிச்சன் என்றெல்லாம் வைத்து எவ்வளவு வசூலிக்கப்போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

கார்ப்பரேட் புக்கிங், காமெடி ஷோக்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால், சிறந்த படம் பார்க்கும் அனுபவத்தைத் தருமா என்றுதான் தெரியவில்லை. இப்போது பெங்களூரில் வந்திருக்கும் இந்த 'டைன்-இன் சினிமா' இன்னும் 6 மாதங்களில் பல மாநிலங்களில் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது PVR.

இந்த 'Dine in Cinema' அனுபவம் எப்படியிருக்கும் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்!

``சினிமாதான் என் வாழ்க்கையா மாறும்'னு நினைக்கல'' - தன் பயணம் தொடங்கியது குறித்து நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வி... மேலும் பார்க்க

அரசன்: சிம்புவுடன் இணையும் கன்னட நடிகர்; அனிருத் பிறந்தநாளில் புது அப்டேட்; ஜெட் வேகத்தில் படக்குழு

தமிழ் சினிமாவில் இப்போதைய 'அரசன்' சிலம்பரசன்தான். கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் 'எஸ்.டி.ஆர். 49'க்கு 'அரசன்' என தலைப்பு வைத்துள்ளனர். இன்னொரு பக்கம் அஷ்வத் மாரி... மேலும் பார்க்க

கம்பி கட்ன கதை: "அவர் சொல்லுற கதையில நாம நடிச்சிட மாட்டோமானு தோணும்" - சிங்கம்புலி குறித்து நட்ராஜ்

மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'கம்பி கட்ன கதை'. ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர்... மேலும் பார்க்க

அரசன்: "200 ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியவர்" - பட அறிவிப்பின்போது சிம்புவின் வள்ளலார் தரிசனம்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் நேற்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி கலைப்புலி எஸ்.தாணு தன்னுட... மேலும் பார்க்க

Arasan: ``அப்போதிருந்தே வடசென்னை உலகத்தைப் பற்றி சிம்புவுடன் பேசி வந்தேன்" - வெற்றி மாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு `அரசன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று காலை வெளியாகியது. `அரசன்' படத்தின் ப்ரோமோ வீடியோ... மேலும் பார்க்க