'அண்ணாமலைக்கு வரவேற்பா?' - கொந்தளித்த BJP சீனியர்கள்! | Cyclone Fengal | Seeman ...
Rain Alert : `இது தற்காலிகப் புயல்தான்..!' ரெட் அலார்ட்? ; இன்று முதல் மழை ஆரம்பம்' - பாலச்சந்திரன்
தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவானதாக இல்லாமல், தற்காலிகப் புயலாக ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்று மாலை லேசான மழை ஆரம்பத்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நாளை நவம்பர் 29, 30ம் தேதிகளில் இந்தப் புயல் சென்னை மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் இடையே கடந்து செல்லவிருக்கிறது. இதனால் இன்றே சென்னை, புதுச்சேரி, கரைக்கால் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்தக் காற்றுடன் கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 29, 30ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இப்பகுதிகளில் இன்று இரவு முதல் மழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் இன்று காலையிலிருந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து பேட்டியளித்திருக்கும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்ட இயக்குநர் பாலச்சந்திரன், "தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்தக் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டு இன்று நிலைகொண்டுள்ளது. இது இன்று மாலை முதல் நாளை (நவ 29) காலைக்குள் வலுவான புயலாக இல்லாமல் தற்காலிகப் புயலாக வலுப்பெறும். இந்தத் தற்காலிகப் புயல் வலுவிழந்து நவம்பர் 30ம் தேதி சென்னை மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் இடையே கடக்கும். இதனால் சென்னையில் இன்று மாலை லேசான மழை ஆரம்பித்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்யும்.
காற்றின் திசை வேகத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளதால் இதுவரை சில மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இன்று இரவு தற்காலிகப் புயல் வலுபெறுவதைப் பொறுத்து மழைக்கான அலர்ட்கள் அறிவிக்கப்படும். இப்போதைக்கு இது குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...