செய்திகள் :

Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?

post image
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது.

முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நாளை மறுநாள் ( நவம்பர் 30) கரையை கடக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

Rain Alert - புயல்

புயல் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் இதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Rain Alert: இன்று `இந்த' மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி விடுமுறை...`இங்கே' காலை 10 மணி வரை மழை!

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது‌.இதையொட்டி, நேற்று இரவு முதல் தமி... மேலும் பார்க்க

Rain Alert: சென்னையில் எத்தனை நாள்களுக்கு மழை நீடிக்கும்... எந்தெந்த மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு இருக்கும்? | Live

தனியார் வானிலை ஆர்வலர் சொல்வதென்ன?!சென்னையில் மீண்டும் மழைப் பொழிவு தொடங்கியிருக்கிறது. அடுத்த 4-5 நாட்களுக்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை விட டெல்டா மாவட்டங்கள... மேலும் பார்க்க

Rain Alert: சென்னையில் இருந்து 900 கி.மீ தொலைவில்... 'கன மழையால் எங்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

வங்கக்கடலில் நிலவும் காற்று அழுத்த தாழ்வு மையம், இன்று ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழ்நாடு மற்றும் இலங்கை கடற்கரை பகுதிகளை நோக்கி நகரலாம் என்று நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்ப... மேலும் பார்க்க

Rain Red Alert: நெருங்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி... நாளை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு..!

வங்கக்கடலில் நவம்பர் 23-ம் தேதி உருவான காற்றத்தழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகிறது. இதனால் தமிழகத்தின் ச... மேலும் பார்க்க

Rain Alert: `7 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை; கடலோர மாவட்டங்களில் கன மழை'- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ... மேலும் பார்க்க