`என் RCB ரசிகர்களுக்கு; சின்னசாமி ஸ்டேடியத்தில்...' - நெகிழ்ந்த டூ பிளெஸ்ஸி
2025 ஐபில் தொடருக்கான மெகா ஏலம் சவுதியில் நடைபெற்றது. இம்முறை நடந்த இந்த மெகா ஏலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.
அதில் ஒன்றாக பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வந்த பாப் டூ ப்ளெஸ்ஸியை டெல்லி அணி 2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. இந்நிலையில் டெல்லி அணிக்கு செல்லும் பாப் டூ பிளெஸ்ஸி தற்போது ஐபில் குறித்தும் பெங்களூரு அணி குறித்தும் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், " மூன்று வருடங்களுக்கு முன்பு நான் ஆர்சிபி அணியில் இணைந்தபோது, இந்தப் பயணம் எப்படி அமையும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் சின்னசாமி மைதானத்தில் விளையாடியதுதான் எனது கிரிக்கெட் பயணத்திலேயே மிகச்சிறந்த அனுபவம்.
நான் இங்கு இப்படி இருப்பதற்கு இந்த மக்கள்தான் முக்கிய காரணம். ஒவ்வொரு முறையும் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைக்கும்போதும் ரசிகர்கள் மேஜிக்கை நிகழ்த்துவார்கள்.
இந்த அற்புதமான நிகழ்வுகளை நான் மறக்க மாட்டேன். இந்த மூன்று வருடங்களை எனக்கு மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி. எனது அணியினர், ரசிகர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...