செய்திகள் :

Rain Alert: தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; சென்னை நிலை என்ன? - வானிலை ஆய்வு மையம் தகவல்! | Live

post image

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``குமரிக்கடல் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மழை

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ம் தேதி முதல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனால், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் வெகு கனமழைப் பெய்ய வாய்ப்பிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது.

மழை

மேலும், வரும் 23-ம் தேதி உருவாகக்கூடிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், 24, 25-ம் தேதிகளில், டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/SeenuRamasamyKavithaigal

Rain Alert: கன மழை அறிவிப்பு; எந்தெந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை?

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்... மேலும் பார்க்க

Rain Alert: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த இரண்டு நாள்களில... மேலும் பார்க்க

Rain Alert: மிதமானது முதல் கனமழை வரை.. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இந்திய வானிலை மைய கணிப்புப்படி, இன்றும், நாளையும் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட... மேலும் பார்க்க

Rain Alert: 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், 19, 20, 21, 22-ந்தேதிகள் வரை தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.இதுகுறித்து செ... மேலும் பார்க்க

Rain Alert : தமிழ்நாட்டில் இன்று மாலை 4 மணிக்குள் 'இந்த' மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

இன்று மாலை 4 மணிக்குள் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் கணிப்புப்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ர... மேலும் பார்க்க