செய்திகள் :

Rain Alert : `மீண்டும் இரவு முதல் காலை வரை மழை..!' - வெதர்மேன் பிரதீப்ஜான் கொடுத்த அப்டேட் என்ன?

post image
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்திருக்கிறது.

சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்து இருக்கிறது. குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாகவே மழை பதிவாகி இருக்கிறது.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

அடுத்த 2 மணி நேரத்தில் (பகல் 12 மணி வரை) ஒரு சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். ECR, OMR பகுதிகளில் மழை நின்ற பிறகு வட சென்னையில் மழை பொழிவு குறையும். மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் என்று பிரதீப்ஜான் பதிவிட்டிருக்கிறார்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Rain: 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!- வானிலை ஆய்வு மையம் தகவல்

வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்ட... மேலும் பார்க்க

நாளுக்கு நாள் மோசமடையும் இந்திய வானிலை... அதிகரிக்கும் பாதிப்புகள்! - அறிக்கை சொல்வதென்ன?

பெருமழை, வெப்ப அலை, பெரும் புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு சமிக்கைகளும் மனித இனத்திற்கு வழங்கப்படும் எச்சரிக்கை ஒலியே என்பதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம்.அந்த வகைய... மேலும் பார்க்க

Rain Alert: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை... 'இன்று காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை இருக்கும்?’

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது என்றும், இது தீவிரமடைந்து அடுத்து இரண்டு நாட்களில் தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்றும் நேற்று சென்னை வானிலை மையம் அறிவித்திர... மேலும் பார்க்க

Rain Alert: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கன மழை எச்சரிக்கை விடுத்த IMD!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்றும் அடுத்த இரண்டு... மேலும் பார்க்க

TN Rains: குன்னூர் 105 mm, கீழ் கோத்தகிரி 143 mm, நீலகிரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. அருவிகள், ஆறுகளில் நீரோட்டம் பெருக்கெடுத்து காணப்படுகிறது.வனக்குட்டைகள் மற்றும் அணைக்கட்டு... மேலும் பார்க்க

Rain Alert : இன்று 'இந்த' மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

கடந்த மாதமே, வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு சந்தித்து இருந்தாலும், மீண்டும் தற்போது வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வர உள்ளது. இதன் விளைவாக, இன்று சென்னை மற்றும் அதன் அருகில் உ... மேலும் பார்க்க