700 கிலோ போதைப்பொருளுடன் பிடிபட்ட ஈரானியப் படகு! 8 பேர் கைது
TN Rains: குன்னூர் 105 mm, கீழ் கோத்தகிரி 143 mm, நீலகிரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது நல்ல மழை பெய்து வருகிறது. அருவிகள், ஆறுகளில் நீரோட்டம் பெருக்கெடுத்து காணப்படுகிறது.
வனக்குட்டைகள் மற்றும் அணைக்கட்டுகளுக்கான நீர் வரத்தும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. வனப்பகுதிகள், விளைநிலங்கள் என அனைத்து இடங்களிலும் பசுமை செழித்து காணப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று இரவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பொழிவு தொடங்கியது. குன்னூர் மற்றும் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது.
மழையளவு அதிக அளவில் தொடர்ந்தால் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரான ராணுவ பயிற்சி மையம் எதிரில் இருந்த ராட்சத மரம் கார் மீது விழுந்ததில் 43 வயதான ஜாகீர் உசைன் என்ற நபர் பரிதாபமாக உயிரிழந்தார். குன்னூர், கிருஷ்ணாபுரம் பகுதிக்குச் செல்லும் சாலையில் பிளவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டது.
மண்சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. குன்னூர் அருகில் வீடு இடிந்ததில் வீட்டில் இருந்த பெண் ஒருவருக்கு காயம் அடைந்தார். அவருக்கு ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாரத் நகர் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மண்சரிவில் சிக்கியது. சில இடங்களில் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொட்டும் மழையிலும் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டு சீரமைத்தனர். குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைப்பாதையோரங்களில் சிறிய மற்றும் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மழை பாதிப்பு குறித்து தெரிவித்த வருவாய்த்துறை அதிகாரிகள், " இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ் கோத்தகிரி எஸ்டேட் -143 மி.மீ
கோத்தகிரி -138மி.மீ
அலக்கரை எஸ்டேட்- 137மி.மீ
அடார் எஸ்டேட் -125மி.மீ
பர்லியார்- 123மி.மீ
பில்லிமலை எஸ்டேட் -118மி.மீ
குன்னுார் -105 மி.மீ பதிவாகியிருக்கிறது. பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்" என்றனர்.