Telangana: திருநங்கை தன்னார்வலர்களை போக்குவரத்து காவலில் ஈடுபடுத்த திட்டம்; ரேவந...
Rain Alert: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கன மழை எச்சரிக்கை விடுத்த IMD!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது. வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகும் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் - இலங்கை கடல் பகுதியை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 15ம் வரையில் தேதி மழை தொடரவுள்ளது.
அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, நாளை, KTCC (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு), கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் தவிர்த்த டெல்டா மாவட்டங்கள், பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும்.
நாளை மறுநாள், KTCC, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள் மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.
வரும் 14ம் தேதி, KTCC, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், நீலகிரி, கோயமுத்தூர்,
திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி ஆகிய மாவட்டங்களில் இருக்கும்.
வரும் 15ம் தேதி, KTCC, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, திண்டுகல், விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுடன் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன மழை இருக்கும்.