செய்திகள் :

Samantha: `சினிமா துறையில் சிறந்த நடிகைகள் யார்?' -ரசிகரின் கேள்விக்கு, சமந்தா சொன்ன பதில்..!

post image

நடிகை சமந்தா எப்போதும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருபவர்.

தன்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தின் ஸ்டோரியில் `Ask me everything' என்ற தலைப்பில் ரசிகர்களின் கேள்விகள் பலவற்றிக்கு பதிலளித்து வருகிறார் சமந்தா. அப்படி ஒருவர் `சினிமா துறையில் சிறந்த நடிகைகள் யார்?' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்தக் கேள்விக்கு பதிலளித்த சமந்தா, `` `உள்ளொழுக்கு' திரைப்படத்தில் நடிகை பார்வதி திருவோத்து, `சூக்ஷமதர்ஷினி' திரைப்படத்தில் நஸ்ரியா, `அமரன்' திரைப்படத்தில் `சாய் பல்லவி', `ஜிக்ரா' திரைப்படத்தில் ஆலியா பட், `CTRL' திரைப்படத்தில் அனன்யா பாண்டே எனப் பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

சமந்தா | Actress Samantha

இவர்களை தாண்டி `ஆல் வி இமேஜின் அஸ் லைட்' படத்தின் நடிகர்களான கனியும், திவ்ய பிரபாவும் அற்புதமாக நடித்திருந்தனர். இந்த நடிகைகளின் வேலைகள் எனக்குப் பிடித்திருந்தது. இவர்களெல்லாம் பல கடினங்களை மேற்கொள்கிறார்கள். இவையெல்லாம் சுலபமானது கிடையாது. இந்தாண்டில் அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் பல நடிகைகளின் பெர்பாமென்ஸிற்காக நான் காத்திருக்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்.

சமந்தா நடிப்பில் கடைசியாக `சிட்டடெல் - ஹன்னி பண்ணி' வெப் சீரிஸ் கடந்தாண்டு வெளியாகியிருந்தது. தற்போது `ரக்த் பிரம்ஹான்ட் - தி ப்ளடி கிங்டம்' என்ற வெப் சீரிஸில் இவர் நடித்து வருகிறார். இந்த சீரிஸும் கூடிய விரைவில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவிருக்கிறது.

Sivakumar: ``ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வரக் காரணம் பெரியார்தான்" - நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் இன்று (பிப் 25) திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.சிவகுமார் நடிகர் என்பதையெல்லாம் தாண்டி ஓவியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். தன் வாழ்நாளில்... மேலும் பார்க்க

srikanth: ``கடைசி வரை சினிமாவில்தான்... 2 கட்சியாக சினிமா பிரிஞ்சு இருக்கு..'' - நடிகர் ஶ்ரீகாந்த்

'ஏப்ரல் மாதத்தில்', 'மனசெல்லாம்', 'சதுரங்கம்', 'நண்பன்' என பல திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீகாந்த்.'ஆப்பிள் பெண்ணே நீ யாரோ...' என அவரது பாடல் கோலிவுட்டையே முணு முணுக... மேலும் பார்க்க

Sivakarthikeyan:``சிவகார்த்திகேயனோட வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனா, எனக்கு..''- ஷாம்

நடிகர் ஷாம் நடித்திருக்கும் `அஸ்திரம்' திரைப்படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஷாம் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வ... மேலும் பார்க்க

இந்த வருடம் தக்ஷசிலா – The Rhythm of Life

கல்லூரி வாழ்க்கை என்பது வெறும் படிப்பா? இல்லவே இல்ல! கலாச்சார நிகழ்ச்சிகளும், competitions-களும் தான் நிறைய பேரோட தலையணை கனவுகளையும், திறமைகளையும் வெளிக்கொண்டு வர்றது. அதுக்குத்தான் CIT-யின் பிரமாண்டம... மேலும் பார்க்க

Vijay: "சச்சின் படத்துல அப்பா மகேந்திரன் முரண்பட்ட அந்த ஒரு விஷயம்" - ஜான் மகேந்திரன் பேட்டி

'சச்சின்' இளமை துள்ளல், காமெடி கலாட்டா, கலர்ஃபுல் காதல் என விஜய் அடித்து ஆடிய வின்னிங் படம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு 'கில்லி' யைப்போல, ரீ-ரிலீஸ் ஆகப்போவதால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருக... மேலும் பார்க்க

Parasakthi Update: மதுரையில் படப்பிடிப்பு நிறைவு; இலங்கையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் `பராசக்தி' படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கத... மேலும் பார்க்க