செய்திகள் :

SaNa: "கனவுத் திட்டத்தைத் தொடங்குகிறேன்" - Music Streaming Platform-ஐ உருவாக்கிய சந்தோஷ் நாராயணன்

post image

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்ம் ஒன்றைத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், "எனது கனவுத் திட்டம் ஒன்றை இன்று (அக்.1) தொடங்கி இருக்கிறேன்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களுக்காக ஒரு மிகத் தெளிவான, விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்மை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பிளாட்ஃபார்ம் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு, இயக்கப்பட்டு, சேவைகள் வழங்கப்படும்.

இதில் பிரபலமான கலைஞர்களும், வருங்கால சூப்பர் ஸ்டார்களும் பங்குபெறப்போகிறார்கள்.

கலைஞர்களுக்கு அதிகபட்ச வருமானம் கிடைக்கும் விதமாகவும், சந்தாதாரர் கட்டணங்கள் (ஏதேனும் இருந்தால்) குறைவாக இருக்கும் விதமாகவும் இந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் இருக்கும்.

இசையில் ஆர்வம் இருக்கக்கூடிய சிறந்த இளைஞர்களைக் கண்டறிய சில ஹேக்கத்தான் நிகழ்வுகளையும் நடத்த இருக்கிறோம்.

உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்க நான் செய்யும் சிறிய முயற்சி. இந்த மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மிற்கு ஒரு நல்ல பெயரைச் சொல்லுங்கள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

STR 49: "திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியீடு"- கலைப்புலி தாணு சொன்ன அப்டேட்

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வட சென்னையைக் களமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன். வெற்றிமாறன... மேலும் பார்க்க

̀̀``இனி நான் சாம்ஸ் இல்ல, என் பெயர் ஜாவா சுந்தரேசன்'' - பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் சாம்ஸ்

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சாம்ஸ். சாம்ஸ் என்பதைத் தாண்டி ̀அறை எண் 305-ல் கடவுள்' படத்தின் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரப் பெயரைச் சொன்னால்தான் இவரின் முகம் சட்டென பலருக்க... மேலும் பார்க்க

Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" - காந்தாரா குறித்து நெகிழும் ஜெயராம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதற்கு முந்தைய பாகத்தின் ப்ரீக்வல் கதையைச் சொல்கிறது இந்த சாப்டர். இப்... மேலும் பார்க்க

Parthiban: ``அதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள்" - நடிகர் பார்த்திபன்

கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்... மேலும் பார்க்க