செய்திகள் :

Shahi Masjid: ``ஷாஹி மஸ்ஜித் கல்கி அவதாரத்துக்கான இடம்" - வழக்கும் வன்முறையும்! - முழுத் தகவல்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் இருக்கிறது ஷாஹி ஜும்மா மஸ்ஹித். இந்த மஸ்ஜித் பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (3), 1904-ன் படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஷாஹி ஜும்மா மஸ்ஜித்

மஸ்ஜித் மீது வழக்கு:

ஞானவாபி மஸ்ஜித் - காசி விஸ்வநாத் கோயில் விவகாரத்தில் மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் என்பவர் ஷாஹி ஜும்மா மஸ்ஜிதுக்கு எதிராக சம்பால் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, வழக்கு தொடர்ந்திருக்கிறார். இவர் தவிர வழக்கறிஞர் பார்த் யாதவ், மஹந்த் ரிஷிராஜ் கிரி, கல்வி தேவி கோயிலின் மஹந்த், நொய்டாவைச் சேர்ந்த வேத்பால் சிங், சம்பால் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் குமார், ஜித்பால் யாதவ், மதன்பால் ஆகிய 8 பேர் ஷாஹி மஸ்ஜிதுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

மனுதாரர்களின் வாதம்:

கடந்த 19-ம் தேதி (செவ்வாய் கிழமை) பிற்பகல் சம்பால் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ``இந்து சாஸ்திரங்களின்படி சம்பால் நகரம் ஆன்மிக புனிதத்தலம். அதன்படி சம்பாலில்தான் கல்கி என அழைக்கப்படும் விஷ்ணுவின் அவதாரம் எதிர்காலத்தில் வெளிப்படும். அந்த அவதாரம் இன்னும் தோன்றவில்லை. ஆனால், அந்த அவதாரத்துக்காக இங்கே 'ஹரிஹர் கோயில்' பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்தது.

வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின்

அந்தக் கோயிலை இந்த மஸ்ஜித் கட்டுவதற்காக 1526-ம் ஆண்டு இடித்து, அதன்மீது மசூதி கட்டியிருக்கிறார்கள். 1527 - 28-ல் முஸ்லிம்கள் கோயில் கட்டடத்தை மஸ்ஜிதாகப் பயன்படுத்த ஆக்கிரமித்திருக்கிறார்கள். எனவே, பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாப்பு 1959-ன் விதி 5-ன் படி, பொதுச் சொத்தைப் பொதுமக்கள் அணுகுவதற்கான உரிமை பொதுமக்களுக்கு உள்ளது. அதன்படி ஸ்ரீ ஹரி ஹர் கோவிலுக்குள் பொதுமக்கள் நுழைவதற்கான உரிமையை அனுமதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டிருக்கிறது.

நீதிபதி உத்தரவு:

மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆதித்யா சிங் அமர்வில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதன்பிறகு நீதிபதி ஒரு வழக்கறிஞர் கமிஷணை நியமித்து, மனுத்தாக்கல் செய்யப்பட்ட அதே நாளில் மஸ்ஜிதில் ஆரம்பக்கட்ட ஆய்வை மேற்கொண்டு, 29-ம் தேதிக்குள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வுக் குழு:

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி ஆய்வுக் குழு சம்பால் மாவட்டத்தில் உள்ள மஸ்ஜிதுக்குச் சென்றிருக்கிறது. அப்போது மஸ்ஜித் நிர்வாகிகளும் உடன் இருந்து ஆய்வுக்கு ஒத்துழைத்திருக்கின்றனர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக நேற்று ஆய்வுக்குழு மஸ்ஜிதுக்குச் சென்றிருக்கிறது. அப்போது அவர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான காவலர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறது. இந்த நிலையில், சுமார் 300-க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்றுகூடி மஸ்ஜிதில் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது கூட்டத்திலிருந்து சிலர் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கின்றர். காவல்துறை வாகனத்துக்கும் தீ வைத்திருக்கின்றனர். காவல்துறை போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதைத் தொடர்ந்து, காவல்துறை மீது சாரமாரியாக கல்வீச்சு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இந்த இருதரப்பு தாக்குதலில் இதுவரை நான்கு பேர் பலியாகியிருக்கின்றனர். இந்த வன்முறைகளுக்கு மத்தியில் ஆய்வுக்குழு மஸ்ஜிதுக்குள் நுழைந்து ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது.

காவல்துறை கூறுவதென்ன?

சம்பால் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் பிஷ்னோய், ``சட்ட ஒழுங்கை பாதுகாக்க கூடுதல் காவல்துறை அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டது. ஆனால், போராட்டக்காரகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பி.ஆர்.ஓ காயமடைந்தார். அது நாட்டுத் துப்பாக்கி என்பது தெரியவந்திருக்கிறது. காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்திருக்கின்றனர். அதனால், காவல்துறையும் எதிர்த்தாக்குதல் நடத்தியது. தற்போது நிலமை கட்டுக்குள் இருக்கிறது. 24 மணி நேரத்துக்கு இணையம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், குடிமக்கள் தங்கள் வீட்டில், கற்கள், சோடா பாட்டில்கள், எரியக்கூடிய பொருள்களை வைத்திருக்கவோ, அல்லது வாங்கவோ, சேகரிக்கவோ தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக 20 பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது." என்றார்.

உயர் நீதிமன்றம் செல்வோம்... - சம்பால் எம்.பி:

சம்பாலின் சமாஜ்வாதி கட்சி எம்.பி., ஜியாவுர் ரஹ்மான் பார்க், ``நீதிமன்றத்தில் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்து சம்பால் மாவட்டத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிகள் நடந்துவருகிறது. 1991-ம் ஆண்டின் வழிபாட்டுச் சட்டத்தின்படி, 1947-ல் இருந்த அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் அவற்றின் தற்போதைய இடங்களிலேயே இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. சம்பாலில் உள்ள ஜும்மா மஸ்ஜித் என்பது பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வரும் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். சம்பால் மாவட்ட நீதிமன்றத்தில் திருப்திகரமான உத்தரவு கிடைக்காவிட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எங்களுக்கு உரிமை உண்டு” என்றார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

Shahi Masjid:``ஒடுக்குமுறை, பிரிவினை... உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்க வேண்டும்"- பிரியாங்கா காந்தி

இந்திய அரசின் பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (3), 1904-ன் கீழ், மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இருக்கிறது ஷாஹி ஜும்மா மஸ்ஜித். இந்த மஸ்ஜித் மீது ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தேர்தல் புயலில் அடித்துச் செல்லப்பட்ட `ரயில் எஞ்சின்’ - அதிர்ச்சியில் ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனியாக 120 தொகுதியில் போட்டியிட்டது. ஆரம்பத்தில் பா.ஜ.கவுடன் இணைந்து போட்டியிட முயன்றது. ஆ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வென்றது எப்படி?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய சரி... மேலும் பார்க்க

Adani : `அதானி விவகாரம்; மோடியும் ஸ்டாலினும் மௌனம் காப்பது ஏன்?' - சீமான் கேள்வி!

சோலார் எனர்ஜி திட்ட ஒப்பந்த விவகாரத்தில் முதலீட்டைப் பெற அமெரிக்க முதலீட்டாளர்களை பொய் சொல்லி ஏமாற்றியதாகவும், அதற்காக இந்திய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் கௌதம் அதானி மீது அமெரி... மேலும் பார்க்க

Canada: `எங்கள் அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதை விட நம்பகத்தன்மையற்றவர்கள்...' - ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனட குடியுரிமைப் பெற்ற சீக்கியர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைசெய்யப்பட்டார். இதில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக நம்பகமான ஆதாரங்கள் இருக்கிறது என கனடா பிரதமர் ஜஸ்டின்... மேலும் பார்க்க