செய்திகள் :

Shivaraj kumar : `நம்பிக்கையுடன் இருக்கிறேன்' - சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் சிவராஜ் குமார்

post image
கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருக்கிறார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் கடந்தாண்டு `ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். அதன் பிறகு இந்தாண்டு தனுஷுடன் இவர் நடித்திருந்த `கேப்டன் மில்லர்' திரைப்படமும் வெளியானது.

கடந்த மாதம் கன்னடத்தில் இவர் நடிப்பில் `பாய்ரதி ரனகல்' திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படம் 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான `மஃப்டி' திரைப்படத்தின் ப்ரீகுவல். இந்த `மஃப்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் சிம்புவின் `பத்து தல' திரைப்படம். `பாய்ரதி ரனகல்' திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் சமயத்தில் டிசம்பர் மாதத்தில் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்லவிருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார் சிவராஜ்குமார். ஃப்ளோரிடாவிலுள்ள மியாமி இன்ஸ்டியூட்டில் சிகிச்சை பெறவிருக்கிறார். டிசம்பர் 24-ம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறதாம்.

Shivarajkumar

நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவராஜ்குமார், `` இந்த செய்தியை புனிதப்படுத்தாமல் இருந்த ஊடகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சைக்காக வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கவலை இருப்பது இயற்கைதான். என்னுடைய சகோதரிகளையும் உறவினர்களையும் பார்க்கும்போது கொஞ்சம் எமோஷனலாக இருக்கிறது. மற்றபடி, நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.'' எனக் கூறினார்.

சிகிச்சையை முடித்துவிட்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி பெங்களூரு திரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MaperumSabaithanil