சென்னை: மனைவியின் ஆண் நண்பரைக் கொலைசெய்த கணவர் - இரண்டு பெண்கள் சிக்கிய பின்னணி!
Shreyas Iyer: ``நான் குணமாகி வருகிறேன்'' - உடல்நிலை குறித்து ஸ்ரேயஸ் ஐயர்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்தக் காயத்தால், ஸ்ரேயஸ் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்த பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்ட்டிற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் பதிவுகளைப் பதிவிட்டு வரும் நிலையில், ஸ்ரேயஸ் ஐயர் தனது உடல்நிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தற்போது நான் குணமாகி வருகிறேன். ஒவ்வொரு நாளும் எனது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது.

நீங்கள் எனக்கு கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. என்னை நினைவில் வைத்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்திருக்கிறார்.















