செய்திகள் :

Shwetha Mohan: ``இசைக்கு நான் நேர்மையாக இருந்திருக்கேன்!" - கலைமாமணி விருது குறித்து ஸ்வேதா மோகன்

post image

தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும்.

2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சாய் பல்லவி
சாய் பல்லவி

சினிமா துறையிலிருந்து 2021-ம் ஆண்டுக்கு நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கும், 2022-ம் ஆண்டுக்கு நடிகர்கள் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா ஆகியோருக்கும், 2023-ம் ஆண்டுக்கு நடிகர்கள் மணி கண்டன், மரியம் ஜார்ஜ், நடன இயக்குநர் சாண்டி, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டப் பிறகு பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் செய்தியாளர்களிடையே பேசியிருக்கிறார்.

அவர், ``அனைவருக்கும் நன்றி. நான் எல்லோருக்கும் நன்றி கடன் பட்டிருக்கேன். தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அடையாளம்.

சொல்லப்போனால், ஆசைப்படாத ஒரு அடையாளம். அம்மாவுக்கு 4 வருஷத்துக்கு முன்னாடி கலைமாமணி விருது கிடைத்திருந்தது.

ஸ்வேதா மோகன்
ஸ்வேதா மோகன்

இந்த விருது இன்னும் நான் பல தூரங்களுக்கு ஓடணும்னு ஊக்கத்தை தந்திருக்கு.

ஸ்வேதா மோகன்னு சொல்றது நான் மட்டும் கிடையாது. எனக்கு பின்னாடி இவங்க இருந்ததுனாலதான் இந்த பயணத்தை என்னால தொடர முடிஞ்சது.

எனக்கு நல்ல பாடல்களை தந்த இசையமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன்.

முக்கியமாக, என்னுடைய குருக்களுக்கும் நான் நன்றி சொல்லியாகணும்.

நேற்று ஜி.வி. சார் `வாத்தி' படத்தின் பாடல்களுக்காக விருது வாங்கியிருந்தது நானே வாங்கின மாதிரியான உணர்வைத் தந்தது. நான் விருதுகளுக்கும், அடையாளங்களுக்கும் பின்னாடி போகாத ஒரு நபர்.

15 வருஷத்துக்கு முன்னாடி, நான் கரியரைத் தொடங்கினப்போ நம்பர் 1 பாடகராகணும்னு, ஹிட் பாடல்கள் பாடணும்னு எந்த டார்கெட்டும் வச்சு நான் வரல.

ஸ்வேதா மோகன்
ஸ்வேதா மோகன்

மியூசிக் என்னுடைய வாழ்க்கை என்பதை மட்டும்தான் நான் யோசித்து வந்தேன்.

என்னுடைய தகுதியை தாண்டி எனக்கு பாராட்டுகளும், அடையாளங்களும் கிடைத்திருக்கு.

விருதுகள் இரண்டாவது விஷயம்தான். இசைக்கு நான் நேர்மையாக இருந்திருக்கேன். என்னுடைய பெஸ்டை கொடுக்கதான் நான் எப்போதும் முயற்சி பண்ணுவேன்." என்றார்.

Dhanush: "120 KM தூரம் நடந்தே மதுரைக்கு வந்தாங்க அம்மா; இன்பநிதிக்கு வாழ்த்துகள்"- தனுஷ் பேச்சு

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

Idly Kadai: " `என்னை அறிந்தால்'-க்கு அப்புறம் இட்லி கடைல வில்லனா நடிச்சிருக்கேன்" - அருண் விஜய்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

Idly Kadai: "மதுரை துலுக்க நாச்சியார் கோயிலில் மதநல்லிணக்கம்" - நடிகர் பார்த்திபன்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் 'இட்லி கடை' படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலர... மேலும் பார்க்க

Kalaimamani Award: `கோடான கோடி நன்றிகள்' - கலைமாமணி விருது குறித்து நெகிழும் எஸ்.ஜே. சூர்யா

தமிழக அரசு சார்பில் கலை மற்றும் இலக்கிய துறையில் சிறந்த விளங்கியவர்களுக்கு உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்படும். 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: 'அந்த ஈரம் இன்றும் என் மனதில் இருக்கிறது' - இயக்குநர் லிங்குசாமி நெகிழ்ச்சி

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் இந்த விருது, ... மேலும் பார்க்க