செய்திகள் :

Sindoor: வீடுகளுக்குக் குங்குமம் அனுப்பும் பாஜக; "ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா?" - பஞ்சாப் முதல்வர்

post image

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது ஆப்ரேசன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த மாதம் இந்தியா தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலை பா.ஜ.க-வினர் கொண்டாடி வருகின்றனர். பா.ஜ.கவினர் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வீட்டிற்கும் குங்குமம் (சிந்தூர்) அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், ''பா.ஜ.க-வினர் சிந்தூர் என்ற வார்த்தையை ஜோக்காக மாற்றிவிட்டனர். இது என்ன ஒரு நாடு, ஒரு கணவர் திட்டமா? ஆப்ரேசன் சிந்தூர் பெயரில் பா.ஜ.க-வினர் வாக்கு கேட்கின்றனர்.

இவர்கள் சிந்தூர் என்ற வார்த்தையை ஜோக்காக மாற்றிவிட்டனர். அவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சிந்தூர் (குங்குமம்) அனுப்புகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி பெயரில் பெண்கள் குங்குமம் வைத்துக்கொள்வார்களா? இது என்ன ஒரு நாடு ஒரு கணவர் திட்டமா?'' என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வர் மான் பஞ்சாப் இடைத்தேர்தலில் தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது பா.ஜ.கவினர் ஆப்ரேசன் சிந்தூரைப் பயன்படுத்தி வாக்கு சேகரிப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது மான் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஆபரேசன் சிந்தூர் என்று பெயர் வைக்கப்பட்டதை விமர்சனம் செய்தார்.

அரசியல் உள்நோக்கத்தோடு இப்பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இது குறித்து அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி முதலில் தன்னை தேநீர் விற்பவர் என்று குறிப்பிட்டார். அதன் பிறகுத் தன்னைப் பாதுகாவலர் என்று குறிப்பிட்டார்.

இப்போது குங்குமம் விற்பனை செய்ய வந்திருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடியின் மேற்கு வங்க பயணம் குறித்து மம்தா பானர்ஜி குறிப்பிட்டு இருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Delimitation: `கமலாலய மவுத் பீஸ்; டெல்லி பண்ணையார்களின் அடிமை’ - எடப்பாடி மீது அமைச்சர் காட்டம்

எதிர்க்கட்சிகளின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது மத்திய பாஜக அரசு.அதேபோல், 2021-ல் கொரோனாவால் எடுக்க முடியாமல்போன மக்கள்தொகை கணக்கெடுப்பும... மேலும் பார்க்க

Kamal : 'ரூ.49 கோடி கடன், திண்டுக்கல்லில் விவசாய நிலம்..!' - கமல் சொத்து விவரங்களும், மதிப்பும்!

வரும் ஜூன் 19-ம் தேதி ராஜ்ய சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி பதவிக்கு போட்டியிட உள்ளார். இதை தொடர்ந்து, அவர் நேற்று தன்ன... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கல்வி; 500 கோடிக்கு மேல் சொத்து; அடுத்தடுத்து வழக்குகள் - யாரிந்த ஆற்றல் அசோக் குமார்?

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நேரம் அது... தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.அக்கட்சியின் முக்கியப் பொற... மேலும் பார்க்க