செய்திகள் :

Sivakarthikeyan: `ஹேப்பி பர்த்டே 'பராசக்தி' ஹீரோ’ -இயக்குநர் சுதாகொங்கரா வெளியிட்ட 'பராசக்தி' வீடியோ

post image
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்த நாள்.

2012ம் ஆண்டு 'மெரினா'வில் ஹிரோவாகத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் திரைத்துறைப் பயணம், இன்று 25வது படமாக தமிழ்த் திரையுலகின் சக்தி மிகுந்த டைட்டிலான 'பராசக்தி'யாக உருவெடுத்துத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்தாண்டு தீபாவளி பண்டிகை வெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்திருந்த `அமரன்', அவரின் கரியரில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக ஹிட் அடித்தது.

பராசக்தி பட புகைப்படங்கள்

இதையடுத்து 'இறுதிச் சுற்று', 'சூரரைப் போற்று' என மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் சிவகார்த்திகேயனின் '25' படம், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படம் என்பது கூடுதல் ஸ்பெஷல்.

இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது. இந்நிலையில் இன்று (பிப் 17) சிவகார்த்திகேயனின் பிறந்த நாளையொட்டி 'பராசக்தி' படப்பிடிப்புத் தளம், பட உருவாக்க வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதைத் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் கொங்கரா, "பிறந்தநாள் வாழ்த்துகள் ஹீரோ. சினிமாவைத் தொடர்ந்து இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவது அதன் பயணம்தான். அந்த வகையில் உங்களோடு இணைந்து பயணித்து, பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியிருக்கிறது." என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் சிவகார்த்திகேயன். வெற்றிப் பயணம் தொடரட்டும், உச்சம் தொடட்டும்.

Dragon: "உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி..." - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.`லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் ... மேலும் பார்க்க

`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' - தியாகராஜன் குமாராராஜா

யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன்... மேலும் பார்க்க

Amaran 100 : `` `நல்லப் படம் இல்லைனு தெரிஞ்சும் பண்றியா'னு எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை!" - கமல்ஹாசன்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தி... மேலும் பார்க்க

Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா...' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?

தன் வாழ்க்கையின் நலனுக்காக எந்தத் தவற்றையும் செய்யத் துணியும் இளைஞன், அதன் விளைவுகளை உணரும் கமெர்ஷியல் பயணமே இந்த 'டிராகன்'.48 அரியர்களுடன் கல்லூரியில் கெத்தாகத் திரிந்த 'டி. ராகவன்' என்கிற 'டிராகன்' ... மேலும் பார்க்க

NEEK Review: இந்த நிலா வெளிச்சம் பாய்ச்சுகிறதா, மேகங்களிடையே மறைந்து ஏமாற்றுகிறதா?

காதல் தோல்வியால் திருமணம் செய்யாமலிருக்கும் பிரபுவை (பவிஷ் நாராயண்) கட்டாயப்படுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே சென்றால், அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வா... மேலும் பார்க்க