குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
Stalin : 'இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்படும்!' - ஸ்டாலின் சொல்வதென்ன?
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், " தமிழ் பண்பாட்டை உலகிற்கு சொல்லும் விழாவாக இந்த விழா அமைந்திருக்கிறது. கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்றார்கள்.
இன்று அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்று கூறியிருந்தேன். பலரும் அது என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அறிவிப்பு என்னவென்றால் தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது. இதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன். 5300 ஆண்டுகளுக்கு முன்னாடியே இரும்பின் பயன்பாடு அறிமுகம் ஆகிவிட்டது. அதற்கான ஆய்வு முடிவுகள் நம்மிடம் இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களிற்கும் கிடைத்த பெருமை.
அகழாய்வில் கிடைத்த பொருட்களைப் பகுப்பாய்விற்கு அனுப்பி வைத்ததில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. இந்த முடிவுகள் ஆய்வாளர்களுக்கு புதிய உற்சாகத்தை தந்திருக்கிறது. இரும்பை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பமே தமிழ் நிலப்பரப்பில் இருந்துள்ளது. இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்படும் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வருகிறேன்.
அதை மெய்பிக்கின்ற வகையில் தமிழ்நாடு தொல்லியல்துறை தொடர்ச்சியாக ஒவ்வொரு விஷயங்களையும் செய்து வருகிறது. தொல்லியல்துறைக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது இலக்கிய புனைவுகள் அல்ல. வரலாற்று ஆவணங்கள். நாம் வாழ்ந்த காலத்தில், நான் ஆளும் செய்யும் காலத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது என் வாழ்நாள் பெருமை. பழம்பெருமை பேசுவது என்பது புதிய சாதனைகளைப் படைக்க ஊக்கமாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs