செய்திகள் :

STR 49: "திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியீடு"- கலைப்புலி தாணு சொன்ன அப்டேட்

post image

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வட சென்னையைக் களமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன், சிம்பு
வெற்றிமாறன், சிம்பு

கடந்த செப்டம்பர் 4ம் தேதி வெற்றிமாறன் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு, தனது எக்ஸ் வலைத்தளத்தில், "வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்" என வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'STR 49' படத்தின் அப்டேட்டை விடியோவோடு வெளியிட்டிருந்தார்.

விகடன், 'டிஜிட்டல் விருது விழா' மேடையிலும் 'Most Celebrated Hero in Digital' விருதைப் பெற்ற சிம்பு வீடியோ மூலம் பேசுகையில், "STR 49 அப்டேட் வெற்றிமாறன் சார்கிட்ட கேளுங்க, ப்ரோமோ விடியோவெல்லாம் ரெடியா இருக்கு, எப்போ வெளியிடுவார்னு தெரியல" என்றார்.

இதையடுத்து தற்போது, கலைப்புலி எஸ்.தாணு, "சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும்.

ஆகையால் சென்சார் பணிகள் நிறைவுற்று, விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது. இதுவே STR-வெற்றிமாறன் கூட்டணி மீது ரசிகர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அன்பிற்கும் எங்களின் நன்றியை தெரிவிக்கும் சிறப்பு தருணமாகும். இனி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்" என்று பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

SaNa: "கனவுத் திட்டத்தைத் தொடங்குகிறேன்" - Music Streaming Platform-ஐ உருவாக்கிய சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விலை குறைவான மியூசிக் ஸ்ட்ரீமிங் பிளாட் ஃபார்ம் ஒன்றைத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.இதுதொடர்பாக சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிரு... மேலும் பார்க்க

̀̀``இனி நான் சாம்ஸ் இல்ல, என் பெயர் ஜாவா சுந்தரேசன்'' - பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் சாம்ஸ்

200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காமெடி நடிகர் சாம்ஸ். சாம்ஸ் என்பதைத் தாண்டி ̀அறை எண் 305-ல் கடவுள்' படத்தின் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரப் பெயரைச் சொன்னால்தான் இவரின் முகம் சட்டென பலருக்க... மேலும் பார்க்க

Kantara: ``விவரிக்க முடியாத அளவிற்கு பெருமை அளிக்கின்றன!" - காந்தாரா குறித்து நெகிழும் ஜெயராம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் `காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதற்கு முந்தைய பாகத்தின் ப்ரீக்வல் கதையைச் சொல்கிறது இந்த சாப்டர். இப்... மேலும் பார்க்க

Parthiban: ``அதனால் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் எனச் சொல்வார்கள்" - நடிகர் பார்த்திபன்

கரூரில் த.வெ.க தலைவர் விஜயின் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி நடிகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்... மேலும் பார்க்க