செய்திகள் :

STR 50: `நீங்க இல்லாம நான் இல்ல' - 50வது படத்தை தயாரிக்கும் சிம்பு - அடுத்தடுத்த அப்டேட்ஸ்

post image
சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் படம் தொடர்பான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சிம்பு நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு `பத்து தல' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 48-வது திரைப்படம் உருவாகவிருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்படத்தை கமலின் `ராஜ்கமல் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். ஆனால், அத்திரைப்படம் அதன் பின்பு டேக் ஆஃப் ஆகாமல் இருந்தது. அத்திரைப்படம் தொடர்பாக எழுந்த வதந்திகளுக்கு தேசிங்கு பெரியசாமி அப்போது விளக்கமும் அளித்திருந்தார். பிறகு, அத்திரைப்படத்தின் தயாரிப்பு பணியிலிருந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் விலகுவதாகத் தகவல்கள் வந்தன. அதனை உறுதி செய்யும் அறிவிப்பும் தற்போது வெளியாகியிருந்தது. சிம்புவுக்கு தேசிங்கு பெரியசாமியின் கதையில் நடித்தாக வேண்டும் என ஆசை இருப்பதால் அத்திரைப்படத்தை தானாகவே தயாரிக்க முன் வந்திருக்கிறார். அதற்காக `ஆத்மன் சினி ஆர்ட்ஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார்.

STR 50

இத்திரைப்படம் தொடர்பாக பதிவிட்டிருக்கும் சிம்பு,`` இறைவனுக்கு நன்றி! தயாரிப்பாளராக புதிய பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி. இதனை தவிர என்னுடைய 50-வது திரைப்படத்தை தொடங்குவதற்கு சிறந்த வழி எதுவுமில்லை. எனக்கும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் இது கனவு திரைப்படம். நீங்க இல்லாமல நான் இல்ல." எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமின்றி அவர் மணி ரத்னம் - கமல் கூட்டணியில் உருவாகும் `தக் லைஃப்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். இத்திரைப்படம் அவரின் 48-வது திரைப்படம் என்ற இடத்தைப் பிடித்துவிட்டது. ஆதலால், தேசிங்கு பெரியசாமி இயக்கும் திரைப்படம் சிம்புவின் 50-வது படம்.

அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரின் 49-வது திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. அவரின் 49-வது படத்தை `பார்கிங்' படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தை `இட்லி கடை' , `பராசக்தி' போன்ற படங்களை தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராம்குமார் இயக்கும் படத்தில் சிம்பு மாணவராக நடிக்கிறாராம்.

சிம்பு, அஸ்வத்

இதுமட்டுமல்ல, `ஓ மை கடவுளே' `டிராகன்' போன்ற படங்களின் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் சிம்பு நடிக்கிறார் என்ற அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகியிருந்தது. `ஜென் சி' வைப்பில் உருவாகும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அனேகமாக இது சிம்புவின் 51-வது திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya: வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது?- `ரெட்ரோ'வின் அடுத்து அப்டேட்!

சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பரில் வெளியாகி, மிகுந்த வரவேற்பை அள்ளியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தடுத்த அப்டேட்களை... மேலும் பார்க்க

Baby & Baby: "சீக்கிரம் கமிட் ஆகுங்க சார்..." - மேடையில் வைத்து ஜெய்யைக் கலாய்த்த யோகி பாபு!

யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் பேபி & பேபி. அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்து... மேலும் பார்க்க

Baby & Baby: "'இசை வள்ளல்' டைட்டில் எனக்கே ஓவாராதான் இருக்கு; ஆனா..." - டி.இமான் பளீச்

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கும் படம் பேபி & பேபி. பிப்ரவரி 14-ம் தேதி ரீலீஸ் ஆகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு ... மேலும் பார்க்க

Baby & Baby: ``அஜித், விஜய்க்கு ஜோடியா நடிச்சவங்கதான் எனக்கும் ஜோடி..." -நடிகர் சத்யராஜ்!

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ர... மேலும் பார்க்க

Samantha: சென்னை அணியை வாங்கிய சமந்தா; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் உலக பிக்கில் பால் லீக்க... மேலும் பார்க்க

Vetrimaran: 'அரசியல் ஆகிடக்கூடாது...' - தவெக விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன்; பின்னணி என்ன?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டாமாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர்... மேலும் பார்க்க