செய்திகள் :

Suriya : மாவட்டம் வாரியாக... இரண்டே நாளில் 4 ஆயிரம் ரசிகர்களை சந்தித்த சூர்யா - பின்னணி இதுதான்!

post image

ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட நாட்களில் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் சூர்யா. தனது மன்றத்தினரின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணித்து அவர்களை வழிநடத்தி வரும் அவர், இம்முறை தமிழகம் முழுவதும் இருந்து வந்த 4 ஆயிரம் ரசிகர்களை சந்தித்துள்ளார்.

கடந்த 13ம் தேதி மற்றும் 14 ம் தேதி இரு நாட்கள் போரூரில் உள்ள சக்தி பேலஸில் இந்த சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. இதில் 70 மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொறுப்பில் உள்ளோர்கள் பங்கேற்றுள்ளனர்.

suriya

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சூர்யா தன் ரசிகர் மன்றத்தினரை சீரமைத்தார். தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள மன்றங்களை எல்லாம் ஒருங்கிணைத்து, அதை டிஜிட்டல் படுத்தியும் உள்ளார். அதன் அடிப்படையும் இந்த சந்திப்பில் 70 மாவட்ட பொறுப்பாளர்கள் இரண்டு நாட்கள் வருகை தந்திருந்து சூர்யாவை சந்தித்து பேசியுள்ளனர்.

கடந்த ஆண்டு இதே போல் நடந்த ஒரு சந்திப்பில் சூர்யா, 'இனி வருடத்திற்கு இரண்டு படங்கள் கண்டிப்பாக தருவேன்' என்று உறுதி மொழி கொடுத்திருந்தார். அதன்படி இந்தாண்டு 'ரெட்ரோ" திரைக்கு வருகிறது. அதனை அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இம்முறை நடைபெற்ற கூட்டத்தில் அப்படி எதுவும் பேசவில்லை. ரசிகர்களிடம் அன்பாக நலம் விசாரித்ததுடன், மன்றத்தின் குறை நிறைகளை மற்றும் செயல்பாடுகளையும் கேட்டறிந்திருக்கிறார் என்கிறார்கள். இந்த நிகழ்வில் சூர்யாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர் ரசிகர்கள். ஒவ்வொருவருடனும் தனித்தனியாக பொறுமைகாத்து புன்னகையுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்

ரெட்ரோ படத்தில்...

இதற்கிடையே சூர்யாவின் 'ரெட்ரோ' வில் இருந்து 'கண்ணாடிப்பூவே', 'கனிமா' பாடலை அடுத்து 'தி ஒன்' பாடல் வெளியாகியிருக்கிறது. படத்தின் ரிலீஸ் மே 1 என அறிவித்துள்ளதால் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இந்த வாரத்தில் நடக்கிறது. நேரு ஸ்டேடியத்தில் வருகிற 18 தேதி நடைபெறும் நிகழ்ச்சிக்கு படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பதுடன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சி உள்பட பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்கிறார்கள்.!

Retro: "`மெளனம் பேசியதே' படம் பிடிக்க இதுவும் ஒரு காரணம்"- ரகசியம் பகிரும் கார்த்திக் சுப்புராஜ்

சூர்யா - பூஜா ஹெக்டே நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. என்னுடைய கண்ணாடி பூவேஇதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், "ரெட்ரோ எ... மேலும் பார்க்க

Retro: "'உங்க மகனுக்கு சினிமாவுல நடிக்க ஆர்வம் இருக்கான்னு டைரக்டர் கேட்டார்" - சிவகுமார் பேச்சு

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள லவ் ஆக்ஷன் திரைப்படம் ரெட்ரோ வரும் மே 1ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்துக்கான இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் ... மேலும் பார்க்க

Retro Audio Launch: "இந்தப் படத்தில் 12 பாடல்கள்" - சந்தோஷ் நாராயணன் பேச்சு

சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார... மேலும் பார்க்க

`தம்பி பாலா ஹீரோவாக அறிமுகமாகும் படம் விரைவில் திரையில்...' - ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!

`கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. `குக்கு வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். இதையெல்லாம் தாண்டி பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த... மேலும் பார்க்க

Retro: பாடகராக சூர்யா கொடுத்த சர்பிரைஸ்; வெளியானது ரெட்ரோ ட்ரெய்லர்!

நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. வரும் மே 1ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம... மேலும் பார்க்க

Naangal Review: டாக்சிக் தந்தையும் பாதிக்கப்படும் மகன்களும்! எதார்த்தம் பேசும் படைப்பு ஈர்க்கிறதா?

1998 காலகட்டத்தில் ஊட்டியில் தனியார்ப் பள்ளி ஒன்றை நடத்துவதோடு, அப்பள்ளிக்கு முதல்வராகவும் உள்ளார் அப்துல் ரஃபே. அவரது மனைவி பிரிந்துவிட்டதால், மகன்கள் மிதுன், ரிதிக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோருடன் வ... மேலும் பார்க்க