செய்திகள் :

Symphony: `நம் பெருமையைப் பறைசாற்ற லண்டன் செல்கிறேன்; என்னைப்போல ஒருவர் இனி..!' - இளையராஜா பெருமிதம்

post image

லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.

மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உருவாக்கி அரங்கேற்றுவதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரவிடச் செய்யவிருக்கும் இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், தொல்.திருமாவளவன், சிவகார்த்திகேயன், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். இன்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை வாழ்த்தி வழிஅனுப்ப சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இளையராஜா

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, "சிம்பொனி இசை ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும். தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அப்பல்லோ அரங்கில் சிம்பொனியை அரங்கேற்றுகிறேன்.

நம் பெருமையைப் பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமையில்லை. நம் பெருமை. நம் தமிழ்நாட்டின் பெருமை. இந்தியாவின் பெருமை. நீங்களெல்லாம் சேர்ந்துதான் நான்.

லண்டன் அப்பல்லோ அரங்கு

'incredible India' போல நான் 'incredible ilayaraja'. என்னைப்போல ஒருவர் இதுக்குமேல யாரும் வரப்போறதும் இல்ல, வந்ததும் இல்ல. நான் என் வேலையில் கவனமாக இருக்கிறேன். நீங்கள் உங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். இறைவனுடைய அருள் நம் எல்லோருக்கும் பரிபூரணமாக இருக்க வாழ்த்துகள்" என்று  பூரிப்புடன் பேசிவிட்டு லண்டன் புறப்பட்டார் இளையராஜா.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

SPB: ’கேளடி கண்மணி’ படத்தில் எஸ்பிபி உண்மையில் மூச்சை அடக்கிப் பாடினாரா? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

What to watch on Theatre: கிங்ஸ்டன், Gentle woman, நிறம் மாறும் உலகில் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

கிங்ஸ்டன் (தமிழ்) Kingstonஅறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கிங்ஸ்டன்'. இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்... மேலும் பார்க்க

Mookuthi Amman 2: `பட்ஜெட்னு மூணு விரலை காமிச்சாரு; Pan India-ல ஒரு அம்மன் படம்' - ஐசரி கணேஷ்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் `மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் உருவாகவிருக்கிறது.மூக்குத்தி அம்மனாக நயன்தாரா முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். இவரை தாண்டி மீனா, ரெஜி... மேலும் பார்க்க

Mookuthi Amman 2: `தயங்கி தயங்கிதான் சொன்னேன்; என்னுடைய கரியர்லேயே மிகப்பெரிய படம் இது' - சுந்தர்.சி

`மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருக்கிறது.மூக்குத்தி அம்மனாக நயன்தாரா முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருக்கிறார். இவரை தாண்டி மீனா, ரெஜ... மேலும் பார்க்க

`மொஸார்ட், பீத்தோவன்... இப்போ இளையராஜா; இது அப்பாவின் நீண்டநாள் ஆசை' - கார்த்திக் ராஜா நெகிழ்ச்சி

லண்டனில் அப்பல்லோ அரங்கில் வருகின்ற மார்ச் 8-ம் தேதி அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.இந்நிலையில் இன்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை வாழ்த்த... மேலும் பார்க்க