நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
TASMAC வழக்கு: `தமிழ்நாட்டை விட்டு, மற்ற மாநில நீதிமன்றத்தை நாடுவது ஏன்?' - எடப்பாடி சொன்ன காரணம்
அந்த தியாகி யார்? என்ற பேட்ஜை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவைக்குச் சென்றிருந்தனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்து சென்றிருந்தனர்.
அதுமட்டுமின்றி சட்டப்பேரவைக்குள் அந்த தியாகி யார் என்ற பதாகைகளைக் காட்டி அமளியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் அவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, " இன்றையத் தினம் சட்டமன்றத்தில் எதிர்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசுவதற்கு அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது.
டாஸ்மாக் அலுவலகத்திலும், தொழிற்சாலைகளிலும் மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறைத் தெரிவித்திருந்தது.
இதில் மற்ற மாநிலங்களில் வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை அரசின் டாஸ்மாக் நிறுவனம் நாடி இருக்கிறது. ஏன்? தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தை நாடாமல் மற்ற மாநில நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கேள்வி எழுப்பினோம்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருப்பதால் அது குறித்து சட்டப்பேரவையில் பேச வேண்டாம் என்று சொல்கிறார்கள். இந்த அரசாங்கம் தவறு செய்திருக்கிறது.

மற்ற மாநிலங்களில் வழக்குத் தொடர்ந்தால்தான் பத்திரிக்கையின் வாயிலாக எந்தத் தகவலும் வெளிவராது என்று திட்டமிட்டு தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றத்தை நாடாமல் இருக்கின்றனர்.
என் மீதும், எங்கள் அமைச்சர்களின் மீதும் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். அப்போது நாங்கள் வெளி மாநில நீதிமன்றத்தை நாடி இருந்தோமா? நாங்கள் வழக்கை இங்குதான் எதிர்க்கொண்டோம். ஆனால் இவர்கள் தவறு செய்திருக்கிறார்கள். அதனால்தான் பயப்படுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், " முதலமைச்சர் ஸ்டாலின் அந்த தியாகி யார்? என்ற கேள்விக்கு, 'நொந்து நூடுல்ஸ் ஆகிப்போன அதிமுக தொண்டர்கள்தான் அந்த தியாகி' என்று கூறியிருக்கிறார். அதிமுக ஒருபோதும் நொந்து நூடுல்ஸ் ஆனது கிடையாது.
எவ்வளவு பிரச்னையை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். உன்னால் முடியுமா? நான் எப்போது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ ?அப்போது இருந்து பிரச்னையைச் சந்தித்திருக்கிறேன்.

எதற்கும் அஞ்சியது கிடையாது. நான் மட்டும் அல்ல அதிமுக தொண்டர்கள் அனைவரும் எதற்கும் அஞ்சியவர்கள் கிடையாது" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.
இபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில் செங்கோட்டையன் வெளியேற்றப்படவில்லை. அவர் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs