செய்திகள் :

They Call Him OG: ``பெண்களை முன்னிலைப்படுத்துவதில் பவன் கல்யாண் ஒரு முன்னோடி" - நடிகை ஸ்ரீயா ரெட்டி

post image

பவன் கல்யாணின் `They Call Him OG' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரீயா ரெட்டி எனப் பலரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

OG - பவன் கல்யாண்
OG - பவன் கல்யாண்

இத்திரைப்படம் குறித்தும், பவன் கல்யாணோடு நடித்த அனுபவம் குறித்தும் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிடம் பேசியிருக்கிறார் நடிகை ஸ்ரீயா ரெட்டி.

ஸ்ரீயா ரெட்டி, "OG' படத்தில் நான் வயதானவராக நடிக்கிறேனோ என்ற கவலைகள் இருந்தன.

ஆனால் அது பெரிய விஷயமில்லை. ஏனெனில், இன்றைய வலிமையான பெண்ணாக எப்படி நடிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமான விஷயம்.

இன்றைய காலத்தில் பெண்கள் சூப்பர் ஹீரோக்கள். இந்தப் படத்தில் குவென்டின் டரான்டினோவின் பாணி மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

டரான்டினோவை இங்கு அழைத்து, இந்திய நட்சத்திரங்களுடன் ஒரு படம் செய்யச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது `OG'.

ஶ்ரீயா ரெட்டி|Sriya Reddy
ஶ்ரீயா ரெட்டி|Sriya Reddy

இந்தப் படம் ஒரு கூல்-லுக்கிங் ஆக்ஷன் படம், இது வழக்கமான தமிழ் அல்லது தெலுங்கு சினிமா ஸ்டைலில் இருக்காது.

பவன் கல்யாணின் ஆளுமை நம்மைத் தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.

பெண்களை முன்னிலைப்படுத்துவதில் அவர் ஒரு முன்னோடி. அவர் மிகவும் படித்தவர். ஆன்மீகப் புரிதல் கொண்டவர்" என்றார்.

Adhira: `இது PVCU'; டோலிவுட்டின் சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் - அசுரனாக எஸ்.ஜே சூர்யா!

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் `ஹனுமான்' திரைப்படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்து பெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புராணங்களை அடிப்படையாக வைத்து ஒ... மேலும் பார்க்க

OG: மேடையிலேயே வாளை சுழற்றிய பவன் கல்யாண்; சில நொடிகளில் சுதாரித்த பவுண்ஸர்! - வைரல் வீடியோ

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தராததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நட... மேலும் பார்க்க

OG: ரூ.1,29,999-க்கு விற்கப்பட்ட ஒரு டிக்கெட்; பவன் கல்யாண் ரசிகரின் 'அதிர்ச்சி' சம்பவம்

நடிகரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாணின் `ஹரிஹர வீரமல்லு' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதனால் பவன் கல்யாணின், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.அதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சுஜித் இயக்... மேலும் பார்க்க

Kalki 2898 AD படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கம்: காரணம் என்ன?

கடந்த 2024ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் நடித்த இந்த படத்தில், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, அன்னா பென், திஷா படானி, கமல் ஹாசன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்த... மேலும் பார்க்க

Anushka: "அருந்ததிக்குப் பிறகு வானம் படக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்றார்கள்" - அனுஷ்கா

இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் விக்ரம் பிரபு, அனுஷ்கா ஆகியோர் நடித்திருக்கும் 'காட்டி' திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இத்திரைப்படத்திற்காக அனுஷ்கா அளித்த நேர்காணலில் தன்னுடைய தொடக்கக் கால... மேலும் பார்க்க