செய்திகள் :

TN Assembly : `வெளியேற்றப்பட்ட அதிமுக; வெளியேறிய காங்கிரஸ்...' சட்டசபையில் நடந்தது என்ன?

post image

ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வந்த வேகத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.

இன்று ஆளுநர், சட்டமன்றத்துக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும் என்றனர். இதனால் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்.

இதனால் ஆளுநர் உரை இல்லாமலே கூட்டம் தொடங்கியது.

முன்னதாக சட்டசபை தொடங்கியதுமே வேல்முருகன் ஆளுநருக்கு எதிரான கோஷமிட்டார்.
ஆளுநர் ரவி

தமிழ் தாய் வாழ்த்து முடிந்து, ஆளுநர் பேச தொடங்கிய சமயத்தில் அதிமுகவினர் அரசுக்கு எதிராகவும், வேல்முருகன்,காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆளுநரால் தனது உரையை தொடர முடியவில்லை. அதே நேரத்தில் ஆளுநர் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று சொல்லியும் அதற்கான எந்த நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் தனது உரையை நிகழ்தாமலேயே ஆளுநர் கிளம்பிவிட்டார். காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்திருக்கிறது. அதேபோல `யார் அந்த சார்?' என்ற பதாகைகளை ஏந்தி சட்டப்பேரவையில் முழக்கமிட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டுள்ளனர். முன்னதாக அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் யார் அந்த சார் என்று வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை சட்டையில் ஒட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Seeman : `உடல் இச்சை ஏற்பட்டால்...' - பெரியாரை மேற்கோள்காட்டி சீமான் உண்டாக்கிய சர்ச்சை

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்திருந்தார். அப்போது, பெரியாரை மேற்கோள்காட்டி அவர் பேசிய சில விஷயங... மேலும் பார்க்க

DMK Vs Congress: ஈரோடு கிழக்கு யாருக்கு? | ஆளுநரை கோத்துவிடும் DMK கூட்டணி கட்சிகள்?- Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று 'யார் சார் அது?' பேட்ஜ்!* - இரண்டாவது நாளாக EPS இல்லை... ஏன்?* - அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - பேரவையில் கவன ... மேலும் பார்க்க

திமுக செயல்பாடுகள் : எதிர்க்கும் தோழமைகள் - நெருக்கடியில் ஸ்டாலின்?

எதிர்க்கும் தோழர்கள்:`அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதா?’ மார்க்சிஸ்ட் கட்சியினர் கடந்த சில மாதங்களாகவே ஆளும் அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதிலும், சாம்சங் தொழிற்சாலை விவகாரத்திலிருந்து விமர்சனம்... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `மீண்டும் ஈ.வி.கே.எஸ் குடும்பமா?’ காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் யார் யார்?

ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 14.12.20... மேலும் பார்க்க