செய்திகள் :

Trump: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடித் திட்டம் `குவண்டமோ சிறை'... அதன் திகில் வரலாறு தெரியுமா?

post image

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவியில் அமர்ந்ததிலிருந்து, சட்டவிரோதமாக அமெரிக்காவில் இருப்பவர்களை நாடு கடத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்கிடையில், திருட்டு, வன்முறை போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை விசாரணைக்கு முன் சிறையில் வைக்கும் லேகன் ரிலே சட்ட மசோதாவில் கையெழுத்திட்டிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ``வெனிசுலா நாட்டிலிருந்து இங்கு குடியேறியவரால் கொல்லப்பட்ட அமெரிக்க மாணவர் லேகன் ரிலே பெயரில் இந்த சட்டம் அழைக்கப்படும்.

ட்ரம்ப்

இந்த சட்டத்தின்படி, 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, பயங்கரவாத சந்தேக நபர்களை அடைத்து வைக்கப்பயன்படுத்தப்படும் குவாண்டனாமோ விரிகுடா இராணுவ சிறையில், 30,000 'சட்டவிரோத வெளிநாட்டினரை' அடைத்து வைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்காக 30,000 பேர் தங்கும் அளவிலான வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென, பென்டகன் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறேன்.

அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் மோசமான குற்றவாளிகளை அவர்களின் சொந்த நாடுகள் அந்தந்த நாட்டினரே வைத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் அவர்களை சிறையில் அடைக்க வழிவகை செய்யப்படுகிறது. நமது நாட்டில் புலம்பெயர்ந்தோர் குற்றங்களின் கொடுமையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு இதுமுதல் படி" என்றார்.

1903-ம் ஆண்டுக்கு முந்தைய ஒப்பந்தத்தின் கீழ் ஹவானாவிலிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட தென்கிழக்கு கியூபாவில் குவாண்டனாமோ விரிகுடாவில் இராணுவ தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. ஜனவரி 2002-ல் கடலோர பகுதியில் அமெரிக்க கடற்படை தளத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த தடுப்பு முகாம், சுற்றிலும் கடல், மின் வேலி, உயரமான சுவர், ஆயிரகணக்கான ராணுவ வீரர்களால் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, 'அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் போராளிகள்" என்று அழைக்கப்பட்டவர்கள், அமெரிக்க சட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட கைதிகள் போன்றோரைக் கையாள்வதற்காக, அப்போதைய அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ் நிர்வாகத்தால் இந்த தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. ஆனால், காலப்போக்கில் தற்போது அது சிறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் பராக் ஒபாமாவும், ஜோ பைடனும் இந்த முகாமை மூடுவதற்கு முயன்றனர். ஆனால் குவாண்டனாமோ சிறைச்சாலையை மூடுவதற்கான முயற்சிகளை காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் எதிர்த்ததால், அந்த முயற்சிகள் தோல்வியை தழுவின.

குவாண்டனாமோ சிறையில், 2020 - 2023 வரை, 37 சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கையால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். 2002-ல் குவாண்டனாமோ சிறையில் புலம்பெயர்ந்த குற்றவாளிகள் தவிர, 800 கைதிகள் இருந்தனர். ஆனால், தற்போது மூன்று பேர் இடமாற்றத்திற்கு தகுதியுடையவர்கள், மூன்று பேர் மறு விசாரணை ஆய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் என அவர்களில்15 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இதே சிறையில், 9/11 சதித்திட்டக் குற்றவாளிகள் எனக் கருதப்படும் காலித் ஷேக் முகமது, USS கோல் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட அப்துல் ரகீம், அல் நஷிரி ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களில் 55 சதவிகித பேர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடாதவர்கள் என ஆய்வு முடிவுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

குவாண்டமோ சிறை

உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு வலுக்கட்டாயமாக உணவளிப்பது உள்ளிட்டக் குற்றங்கள் தொடர்வதாகவும், சிறை சித்திரவதையால் இதுவரை 7 கைதிகள் தற்கொலை செய்தும், 9 கைதிகள் கொடுமையால பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றனர் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதனால், குவாண்டனாமோ சிறை மனித உரிமை மீறல்களுக்காக உலகளவில் கண்டனத்தையும் எதிர்கொள்கிறது. தற்போது டொனால்ட் ட்ரம்பின் இந்தப் புதிய சட்டத்தை விமர்சிப்பவர்கள், ``இந்தச் சட்டம் அமெரிக்காவின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் சட்ட ஒழுங்கின்மை" எனக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

TVK: தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? - தீயாய் பரவும் தகவலின் பின்னணி என்ன?

நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகியான காளியம்மாள், பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது. காளியம்மாள் த.வெ.க-வில் இணைவாரா.. நா.த.க-விலேயே த... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்கள் இடையே கடந்து சென்ற கடலோர காவல் படை கப்பல்: புதிய பாலத்தினை இயக்கி ஆய்வு!

நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடலின் மீது உருவாக்கப்பட்டது பாம்பன் பாலம். நூற்றாண்டுகளை கடந்து இயங்கிவந்த இந்த ரயில் பாலத்தில் கடல் அரிப்பின் காரணமாக அவ்வப்போது பழு... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: விகடன் செய்தி எதிரொலி; ரயில்வே பாலம் பாதையைச் சீரமைத்து அதிகாரிகள் நடவடிக்கை!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னக்கம்மியம்பட்டு அருகே அமைந்துள்ளது ரயில்வே பாலம். நாட்றம்பள்ளி மற்றும் வாணியம்பாடியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், அப்பகுதி மக்கள் என அனைவரு... மேலும் பார்க்க

'ஆளுநர் எங்களுக்கு எதிராகச் செயல்படுவதும் நன்றாகத்தான் இருக்கிறது'- ஸ்டாலின் சொல்வதென்ன?

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.01.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செ... மேலும் பார்க்க

Union Budget 2025 : 'ஏறுமா... இறங்குமா?' - பட்ஜெட்டிற்கு பிறகு தங்கம் விலை... நிபுணர் விளக்கம்

தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.62,000-த்தை நோக்கி நகர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,730-க்கும், ஒரு பவ... மேலும் பார்க்க

Budget 2025 : `'இந்த' வரிக்கு சிங்கப்பூர் மாடல்’ - வரவிருக்கும் பட்ஜெட் குறித்து நிபுணர் கருத்து

இதோ மத்திய பட்ஜெட் தேதி நெருங்கிவிட்டது. நாளை தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்.இந்தப் பட்ஜெட்டை நடுத்தர மக்கள் மிகவும் கூர்மையாக கவனித்து வருகிறார்கள். இதற்கு அதிகரித்து வரும் பணவீக்கம் தான் மிக முக்கிய கா... மேலும் பார்க்க