Trump: `ட்ரம்ப் நான் இத சொல்லியே ஆகணும்' - எலான் மஸ்க் ட்வீட்; ட்ரம்ப்பின் ரியாக்சன் என்ன?!
அமெரிக்க அதிபராக ட்ரம்பின் வெற்றியில் எலான் மஸ்க்கின் பங்கு கணிசமாக உள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் இருந்தே ட்ரம்பை எலான் மஸ்க் புகழ்வதும், எலான் மஸ்க்கை ட்ரம்பை புகழ்வதும் சகஜமான விஷயங்கள் ஆகிவிட்டன. ஆனால், இவை எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே போய், தற்போது எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, "ஒரு ஸ்ட்ரைட் ஆண் இன்னொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அவ்வளவு ட்ரம்பபை நான் காதலிக்கிறேன். ஐ லவ் ட்ரம்ப்" என்று பதிவிட்டுள்ளார்.
I love @realDonaldTrump as much as a straight man can love another man
— Elon Musk (@elonmusk) February 7, 2025
இதற்கு நெட்டிசன்கள் பலவாறு கமென்ட்டுகளை குவித்து வரும் நிலையில், ட்ரம்பின் மகன் இதற்கு சிரிக்கும் எமோஜியைப் பதிவிட்டுள்ளார்.
ஜப்பான் பிரதமருடன் ட்ரம்ப் நிகழ்த்திய செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப்பிடம் இதுகுறித்து ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, 'எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ன நினைப்பார்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, "ஓ... அவர் எப்படியாவது சரியாகிவிடுவார் என்று நினைக்கிறேன்' என்று சின்ன புன்னகையுடன் பதிலளித்துள்ளார் ட்ரம்ப்.
தற்போது எலான் மஸ்க்கின் பதிவும், ட்ரம்ப்பின் பதிலும் வைரலாகி வருகிறது.