ரசிகர்கள்தான் என்னுடைய மிகப் பெரிய சொத்து: ஹார்திக் பாண்டியா
Union Budget 2025: 'அடுத்த வாரம்' - புதிய வருமான வரி சட்டம் அறிமுகம் - நிதியமைச்சர் அறிவிப்பு!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
புதிய வருமான வரி சட்டம் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுவதாக நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இதுவரை 1961-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய சட்டத்தைக் கடைபிடித்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு 2010, 2017, 2024-ம் ஆண்டுகளில் புதிய வருமான வரி சட்டத்தை அறிமுகப்படுத்த முயன்றும், எதுவும் பலனளிக்கவில்லை.
அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் புதிய வருமான வரி சட்டம் மக்கள் கருத்திற்கு பிறகே, நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சட்டம் இந்தக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று முன்பே தகவல்கள் வந்துகொண்டிருந்த நிலையில், 'அந்தச் சட்டம் மக்களுக்கு எளிதாகவும், புரியும்படியும் இருக்க வேண்டும்' என்பது நிபுணர்கள் மற்றும் மக்களின் கருத்தாக உள்ளது.